பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 O 2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு விட்டார். அந்த இணைப்பின் பயனாக வைதிகர் -சைவர் போராட்டம் ஒழிந்தது. புதிய வைதிக சைவம் தழைத்தது. இந்த முடிவை ஏற்றுக் கொள்ளா விடின் சேக்கிழார் வேதம், ஆகமம், வேள்வி என்பவற் றுடன் கலந்து உருவ வழிபாடு, அபிடேகம், அர்ச்சனை என்று கூறுங் கருத்துக்கள் பொருளற்றவை யாகிவிடும். இந்த முடிவை ஏற்றுக் கொண்டால் காப்பியத்தில் பேசப் பெறும் மேலே கூறியவை பொருளுடையவை ஆக விளங்கக் காணலாம். சாதி வேறுபாடு பாராட்டக்கூடாது என்று சிலர் நினைத்தனர் நாயன்மார்கள் காலத்தில் தமிழகத்தில் சாதி வேறுபாடுகள் மிகுதியாக இருந்தன என்பதும் முன்னரே குறிக்கப் பெற்றது. சேக்கிழார் காப்பியம் இயற்றுகின்ற பன்னிரண்டாம் நூற்றாண் டைப் பொறுத்தமட்டிலும் சாதிப் பிரிவினை மிகப் பெரிய அளவில் இருந்து வந்தது என்பதையும் மறுத்தற்கில்லை எனவே சேக்கிழார் இந்த வேறுபாட்டைப் பெரியபுராணத்தில் விடாமற் குறித்துச் செல்கிறார். இவருக்கு வழிகாட்டியாக விளங்கியவர் சுந்தரர் என்று கூடச் சொல்லவேண்டும். தில்லை வாழ் அந்தணர்தம் அடியார்க்கும் அடியேன்” என்று இறைவன் எடுத்துக் கொடுத்த பகுதியை முடித்ததுடன், அடுத்த வரியிலேயே கூடத் 'திருநீலகண்டத்துக் குயவனார்க் கடியேன்' என்றும் பாடும் பொழுது அந்தணர், குயவர் என்ற சாதிப் பெயர்கள் தலை தூக்கி நிற்கின்றன. அடுத்து வருகின்ற அடிகளில் இவ்வாறு சாதிப் பெயர்கள் பேசப்படவில்லை எனினும் முதல் இரண்டு. அடிகளில் வருவதை மறுக்க முடியாது. காப்பியப் புலவராகிய சேக்கிழார் பெரியபுராணத்தில் வரும் 63 நாயன்மார்களில் ஒரு சிலர் தவிர ஏனையோர் அனைவருக்கும் அவரவர் பிறந்த சாதியை விடாமல் குறித்துச் செல்கிறார். வேதியர்கள் என்று பொதுவாகக் குறிப்பிடுவது தவிர சண்டேசருடைய தந்தையாகிய விசாரசருமன் வேதியருள் காசிய கோத்திரத்தில் தோன்றினான் என்றும் பேசுவது அற்றை நாள் சமுதாயத்தில் நிறைந்திருந்த அத்தனை சாதிப் பெயர் களையும் கோத்திரப் பெயர்களையும் கவிஞர் அறிந்திருந்தார் என்பதை அறிவிக்கின்றது. சமுதாயத்தில் நிலவியிருந்த இந்தச் சாதி வேற்றுமைகளை யும் பாகுபாடுகளையும் சேக்கிழார் அறிந்திருந்தார் என்று கூறுவதால், அவரும் இதனை உடன்பட்டார் என்று கொள்வது