பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 0 3 தவறாகும். காப்பியப் புலவன் தன் காலத்தில் சமுதாயம் இருந்த நிலையை வருணிப்பது முறையாகும். அவ்வாறு கூறுவ தால் அதில் உள்ளவற்றை எல்லாம் அவன் விரும்பி ஏற்றான் என்பது பொருளன்று என்பதை மனங்கொள்ள வேண்டும். சமுதாய நிலையைக் கூறும் கவிஞன் சந்தருப்பம் நேரும்போதெல் லாம் இந்தப் பிரிவினையைச் சாடுவதையுங் காணமுடிகிறது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் இந்த வேறுபாடுகள் நிறைந்த சமுதாயத்தில் தோன்றிய ஒரு கவிஞன், எவ்வளவுதான் அதனைத் தான் விரும்பாமல் அதனை மாற்றியமைக்க விரும்பினாலும் திடீரென்று இவை அனைத்தும் தவறு என்று கூறுவானேயானால் அவனைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளாது. பன்னூறு ஆண்டு களாக ஊறிப்போன ஒரு நம்பிக்கையைத் தனி ஒருவர் எவ்வளவு வலுவுடையவராயினும் தகர்த்தல் இயலாது. அவ்வாறு தகர்க்க முயல்பவர்களைச் சமுதாயம் ஏற்க மறுத்துவிடும். இந்த மனநிலையை நன்கு புரிந்து கொண்டிருந்த காரணத் தால்தான் வேதவழிகட்கு முற்றிலும் முரணான அபிடேகம், அர்ச்சனை, பூசனை, உருவவழிபாடு, ஐந்தெழுத்து மந்திரம் என்பவற்றைத் திருஞானசம்பந்தர் அவ்வளவு வலியுறுத்துகின் றார். இதனை நன்கு விளங்கிக் கொண்டமையின் சேக்கிழாரும் இதே வழியைப் பின்பற்றுகின்றார். வைதிக வேதியர்பற்றிக் கூறும்போதெல்லாம் மறவாமல் இந்த வேதியர்கள் சிவவேள்வி செய்கின்றவர்கள்; சிவபூசையை, அபிடேகம், அர்ச்சனை, ஐந்தெழுத்து மந்திரம் என்பவற்றுடன் செய்பவர் என்றும் கூறிச் செல்கிறார். வேத வழிபட்ட வேதியர் இவற்றைச் செய்ய மாட்டார்கள் என்று கூறிப் பயனில்லை. இத் தமிழகத்தில் தொன்று தொட்டு வாழ்ந்து வந்த வேதியர் அனைவரும் வேதங் களை நன்கு அறிந்திருந்தாலும் தம் பழக்கத்தை விட்டுவிடத் தயாராக இல்லை. இதையேதான் ஞானசம்பந்தர் வலியுறுத் தினார். இதேபோலத்தான் தாம் ஏற்றுக்கொள்ள விரும்பா விடினும் அன்று நாடு முழுவதும் பரவியிருந்த சாதிப் பிரிவினையை இல்லையென்று மறைக்காமல் உள்ளபடியே கூறிவிட்ட கவிஞர், சமயம் நேரும் பொழுதெல்லாம் அதை மறை முகமாகக் கண்டிக்கவும் தவறுவதில்லை. . நமிநந்தியார் இயல்பு-தெளிவு ஆனால் இந்தக் கண்டனம் மறுப்பு, என்பவை ஆசிரியன் கருத்தாக வெளிப்படுவதில்லை. அவ்வாறு வெளிப்படின் அதற்கு ஆற்றல் குறைவு. அதன் எதிராகப் பாத்திரங்கள் மூலமாக