பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 04 பெரியபுராணம் - ஒர் ஆய்வு அவை வெளிப்பட்டன. இதனால் விளைந்த பயன் இரண்டு வகைப்படும். காப்பியப் பாத்திரங்கள் சிறப்படைந்தன; அதனுடன் கவிஞன் தன் கருத்தையும் வலுவாகக் கூறமுடிந்தது. இவற்றுக்குச் சில எடுத்துக் காட்டுக்களைக் காணலாம். . நமிநந்தி என்ற நாயானாரைக் கூறவந்த சேக்கிழார், '...... பேணும் நீற்றுச் சைவநெறி ஒருமை நெறிவாழ் அந்தணர்தம் ஒங்கு குலத்தினுள் வந்தார் என்று கூறும்பொழுது நீற்றுச் சைவ நெறியாகிய ஒருமை நெறிவாழ் அந்தணர் என்று விரிவுரை செய்வது இவர்கள் வடநாட்டு வைதிகரிலும் மாறுபட்டவர்கள் என்பதை அறிவிக்கவே யாகும். என்றாலும் நமிநந்தியடிகள் என்பார் சாதி வேறுபாட் டைக் கருதுபவராவார். இந்த அந்தணர் திருக்கோயில் வழிபாட்டுடன் வீட்டில் செய்யும் வைதிக காரியங்களாகிய 'கிரஹற்யம்' என்னும் சடங்குகளையும் விடாமல் செய்தார் எனக் கூறவந்த கவிஞர், மறையின் பொருளை அருச்சிக்கும் மனையின் நியதி வழுவாமல் உறையும் பதியின் அவ்விரவே அனைவார்.....' " என்று கூறுகிறார். திருவாரூருக்குத் தினமும் சென்று வழிபடும் இயல்புடைய ராகிய நமிநந்தியார் ஒரு நாள் இறைவன் திருவோலக்கத்தைக் கண்டு வணங்கினார். அன்று ஆரூரையடுத்த மணலி என்னும் ஊருக்கு ஆரூர்ப் பெருமான் சென்று வருதல் மரபாதலின் இரவு முன்னேரத்தில் உலாப் புறப்பட்டார். இறைவன் வீதியுலா வரும்பொழுது இன்ன விடத்தில்தான் இன்னார் இருந்து வணங்க வேண்டும் என்னும் நியதி இன்மையின் எல்லாச் சாதியாரும் வேறுபாடின்றித் தெருவில் நின்று வணங்கினர். தேவர் பெருமான் எழுச்சிதிரு மணலிக்கு ஒருநாள் எழுந்தருள யாவர் என்னாது உடன் சேவித்து எல்லாக்குலத்தில் உள்ளோரும் மேவ அன்பர் தாமும் உடன் சேவித்து அணைந்து விண்ணவர்தம் காவலாளர் ஒலக்கம் அங்கே கண்டு களிப்புற்றார்' " i