பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 0 5 என்ற பாடலில் மக்கள் அனைவரும் வேறுபாடுகளை மறந்து வணங்கிய சிறப்பை அறிவிக்கிறார் கவிஞர். இறைவன் திருவுலாவை வணங்கிவிட்டு ஊர் திரும்பிய மறையவராகிய நமிநந்தியார் வீட்டினுள் புக விரும்பவில்லை. திண்ணையில் அமர்ந்து மனையாட்டியைப் பார்த்து 'தங்கள் பெருமான் திருமணலிக் கெழுச்சி சேவித்து உடன் நண்ண எங்கும் எல்லாரும் போத இழிவு தொடங்கிற்று எனை”..." என்று கூறிவிட்டார். எங்கும் எல்லாரும் வேறுபாடின்றிக் கூடிநின்றமையின் தம்பால் தீட்டு (இழிவு) வந்துள்ளது என்று நினைத்துவிட்டார் அடியார். ஆகவே மறுபடியும் குளித்து விட்டுத்தான் கிரஹற்யபூசை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார் தொண்டர். மனைவியார் தண்ணிர் முதலியன தயாரிப்பதற்குச் சற்றுத் தாமதமாகும் அந்த நேரத்தில் அவரையும் அறியாமல் உறங்கிவிட்டார். ஆரூர்ப் பெருமான் அவர் கனவில் வந்து, "ஞான மறையோய்! ஆரூரில் பிறந்தார் எல்லாம் நம் கணங்கள் ஆன பரிசு காண்பாய்' என்று கூறிவிட்டு மறைந்துவிட்டார். திடுக்கிட்டு எழுந்த மறையவர் குளித்தல் முதலியன செய்யாமல் அப்படியே வழிபாடு முதலியவற்றை முடித்துக் கொண்டு மறுநாள் திருவாரூருக்குச் சென்றபொழுது, 'தெய்வப் பெருமாள் திருவாரூர்ப் பிறந்து வாழ்வார் எல்லாரும் மைவைத் தனைய மணிகண்டர் வடிவேயாகிப் பெருகொளியால் மொய்வைத் தமர்ந்த மேனியராம்பரிசு கண்டு...'" வணங்கி இறைவனிடம், ‘அடியேன் பிழையைப் பொறுத்தருள வேண்டும் என்று பணிந்து...'" வேண்டினார் என்றும் கவிஞர் பாடுவது மென்மையாக இந்த அசட்டு நம்பிக்கையைச் சாடுவதாகும். இது உண்மையில் வாழ்ந்த ஒர் அந்தண அடியாரின் வரலாறு ஆகலின், இதில் கவிஞரின் எண்ணத்துக்கு முழு உரிமை தந்து பாடமுடியாது. எனவே தம் உரிமையைப் பயன்படுத்தி இதனைச் சர்டும் இடங்கள் இரண்டுண்டு. அவற்றைச் சற்று விரிவாகக் காண்பதன் மூலம்