பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 Q 6 பெரியபுராணம்- ஓர் ஆய்வு காப்பியப் புலவர் இந்தச் சாதி வேறுபாட்டில் கொண்டிருந்த எண்ணம் என்ன? என்பதை விளங்கக் காணமுடியும். பிறப்பால் வேதியராகிய பிள்ளையார் அரிசனர் ஆகிய பெரும்பானரை ஏற்றுக்கொண்ட விதம் திருஞானசம்பந்தர் வேதநெறி தழைத்து ஓங்கத் தோன்றி யவர் என்பது சேக்கிழாரின் அழுத்தமான நம்பிக்கை. ஆனால் அவர் வேதநெறி என்று கூறுவது வடவர் கூறும் வைதிக நெறி யன்று. சிவபெருமானை முழுமுதற் பொருளாகக் கொண்டு வழிபடும் வேதநெறியாகும் இது. எனவே அந்நெறி தழைக்க வந்த திருஞான சம்பந்தர், கவுணியர் (கவுண்டின்ய) கோத்திரத் தில் தோன்றிய சிவபாத இருதயரின் மகனாய்த் தோன்றினார்' என்பதை முதலிலேயே வலியுறுத்திக் கூறிவிட்டார். இனிச் சிவபாத இருதயர் மணந்த பகவதியார் என்னும் கற்புமேம்படு அம்மையாரும் இந்நாட்டுச் சைவ வைதிக நெறிமரபில் வந்தார் என்பதையும், 'மரபு இரண்டும் சைவநெறி வழிவந்த கேண்மையினார் அரவு அணிந்த சடைமுடியார் அடியலால் அறியாது பரவுதிரு நீற்றன்பு பாலிக்கும் தன்மையராய்...'" என்ற பாடலில் விளக்கமாகக் கூறிவிடுகிறார். 'இருக்கு மொழிப் பிள்ளையார் "... என்று இவரைக் கவிஞர் குறிப்பதால் இவர் பாடல்கள் இருக்கு வேதத்தின் தமிழாக்கமாகும் என்ற பொருளும், இருக்கு வேதத்தைக் கூறி யாகஞ் செய்பவர் மைந்தனார் என்ற பொருளும் தோன்ற கவிஞர் விவரிக்கின்றார். இத்துணை வைதிக நெறியுடன் வாழும் திருஞான சம்பந்தரைத் தேடித் திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் மனைவியார் மதங்க சூளாமணியாருடன் வந்து சேர்ந்தார். யாழ்ப்பாணர் மரபினர் ஏறத்தாழத் தீண்டாதார் வகுப்பைச் சேர்ந்தவர்களாகவே கருதப் பெற்ற காலம் அது. அதில் இப் பெரும்பாணர், தாம் மட்டும் வாராமல் மனைவியாரையும் உடன் அழைத்து வந்து விட்டார். 'பெரும்பானர் வரவறிந்து பிள்ளையார் எதிர்கொள்ள கரும்பார்செங் கமலமலர்த் துணைப்பாதம் தொழுதெழுந்து விரும்பார்வத் தொடும் ஏத்தி மெய்ம் மொழிகளாற் றுதித்து வரும் பான்மை தருவாழ்வு வந்தெய்தமகிழ் சிறந்தார்.