பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 (; 7 'அளவிலா மகிழ்ச்சியினார் தமை நோக்கி ஐயர்! நீர் உளமகிழ இங்கணைந்த உறுதியுடையோம்' என்றே... ' 'கோயிலினில் புறமுன்றில் கொடுபுக்கு கும்பிடுவித்து ஏயும் இசை யாழ் உங்கள் இறையவருக்கு இங்கு இயற்றும் என..' என்ற பாடல்களில் பிள்ளையாரும் பாணரும் சந்தித்ததையும் அங்கு நடைபெற்ற உரையாடலையும் பிள்ளையார் செய்தவற் றையும் கவிஞர் பாடுகின்றார். பாணர் பிள்ளையாரைச் சென்று சந்தித்ததுதான் வரலாறே தவிர, அவர்கள் என்ன பேசிக் கொண்டார்கள் என்பதைச் சேக்கிழார் அறிய வாய்ப்பு இல்லை. ஆனால் பாணர் பிள்ளையாருடனேயே தங்கிவிட்ட வரலாற்று நிகழ்ச்சியையுைம் பிள்ளையார் அவர்களைக் கவனித்துக் கொண்ட முறையையும் வைத்துச் சேக்கிழார் எந்த முறையில் உரையாடல் நடந்திருக்கும் என்பதை ஊகித்துக் கவிதை பாடுகிறார். சேக்கிழார் மனக் கருத்துக்கு முழுவதும் இடந்தந்து பேசும் சில இடங்களில் இதுவும் ஒன்றாகும். 57 ஐயர் என்ற சொல்லைப் பயன்படுத்திய விதம் பிறப்பால் வேதியராகிய சம்பந்தர், பிறப்பால் தீண்டத் தகாதவராகிய யாழ்ப்பாணரை முதன் முதலில் பார்த்து அவரை விளித்துப் பேசும் முதல் வார்த்தை ‘ஐயரே!' என்பதாகும். வேதியர்களை மட்டும் விளிக்கும் பெயராகப் பின்னாளில் ஆகிவிட்ட 'ஐயர்' என்ற இச்சொல் 'ஐ வியப்பாகும்' என்ற தொல்காப்பியப் பொருளமைதி கொண்ட சொல் லாகும். நம்மால் பெரிதும் மதித்துப் போற்றப்படவேண்டிய வர்களை 'ஐயர்' என்று அழைப்பது அந்நாளைய மரபு. எனவே சம்பந்தர் பாணரை ‘ஐயரே!' என்று அழைத்தார் என்றால் அதில் ஒரு நுணுக்கமான பொருளும் உண்டு. இறையருள் பெற்ற பிள்ளையார், பாணரை யாவர் என்று உள்ளவாறு அறிந்திருக்க நியாயமுண்டு. ஆனால் சாதிப்பற்றில் மிகுந்துள்ள வேதியர்கள், பிள்ளையாரைச்சுற்றி இருக்கும் வேதியர்கள், பாணரைத் தாழ்ந்த வகுப்பைச் சேர்ந்தவர் என்று மட்டுமே அறிந்திருப்பார்களே தவிர அவர் பெருமையை அறிந்திருக்க நியாயமில்லை. என்றாலும் அந்த வேதியர்கள் பிள்ளையாரின் மாபெரும் ஆற்றலை நேரே கண்டவர்களாதலின் அவர் கூறுவதற்குக் கட்டுப்பட்டு நடக்கக் கூடியவர்கள். பிள்ளையார் பாணரைக் கண்ட அக்கணத்திலேயே அவர் இறுதி