பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 0 8 பெரியபுராணம்- ஓர் ஆய்வு வரைத் தம்முடன் இருக்க வேண்டியவர் என்பதை அறிந்து கொண்டார். உடன் இருக்கின்ற மறையவர்களும் பெரும் பாணருக்கு உரிய மதிப்புத் தந்து இவரைத் தம்முள் ஒருவராக ஏற்றுக் கொண்டால் ஒழியப் பின்னர் பெருந்தொல்லைகட்கு ஆளாக நேரிடும். எனவே பிள்ளையார், தாம் பாணர்பால் எத்துணை மரியாதை வைத்திருக்கின்றார் என்பதை அவர்கள் அறியுமாறு செய்துவிட்டால் பின்னர் ஒரு தொல்லையும் இல்லாமல் இருக்கலாம். பிள்ளையார் வெளிப்படையாக உடனுறையும் வேதியர்கட்கு ஒன்றும் கூறாமல், தாம் பேசும் முறையிலேயே அவர்கள் மனம் அமைதி அடையும்படிச் செய்துவிட்டார் என்பதைத் தம் கூர்த்த மதியால் உணர்ந்த சேக்கிழார், இந்த அற்புதமான வகையில் பிள்ளையார் பேசுகிறார் என்று பாடல் வகுக்கின்றார். சாதி வேதியர் நடுவே சாதி அந்தணராகிய பிள்ளையார், தீண்டாத சாதியைச் சேர்ந்த பாணரை ‘ஐயரே!' என அழைத்தார். திருக் கோயிலுக்கும் அழைத்துச் சென்றார். 'உங்கள் இறைவர்க்கு இங்கு யாழ் வாசியுங்கள்' என்றார். இவற்றை எல்லாம் வியப்புடன் பார்த்துக்கொண்டிருந்த சாதி வேதியர்கள் எவ்வித மான எதிர்ப்பும் தெரிவிக்க முடியாமல், பிள்ளையார் செயலை ஏற்றுக் கொள்வது தவிர வேறு வழியில்லாமல் இருந்துவிட்டனர். இவ்வாறுதான் நடந்திருக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்து கவிஞர் இந்த முறையில் பாடல்களை அமைக்கின்றார். இது சீர்காழியில் நடந்தது. ஆனால் வெளியூர் செல்லும் பொழுது ஏனையவர்களும் இதனை அறிந்து கொள்ளும் முறையில் இச் சொல்லை மறுபடியும் பயன்படுத்தியதாகக் கவிஞர் பாடுகின்றார். எருக்கத்தம்புலியூர் என்ற ஊரின்கண் சென்றவுடன் பாணர் பிள்ளையாரைப் பரவித் தொழுது இப்பதி அடியேன் பிறந்த ஊர்' என்று கூறவும் பிள்ளையார், 'ஐயர் நீர் அவதரித்திட இப்பதி அளவில் மாதவம் முன்பு செய்தவாறு' " என்று அவ்வூரிலுள்ள அனைவரும் கேட்குமாறு கூறினார் என்று சேக்கிழார் பாடுவதிலும் ஒரு குறிப்புண்டு. எவ்வளவுதான் ஒருவர் பிறரால் போற்றப்பட்டாலும், அவர் பிறந்த ஊரில் அவரை மதித்துப் போற்றுபவர்கள் இருப்பது கடினம். உள்ளூர் மக்களால் மதிக்கப்படுவது என்பது அரிய காரியம். எனவே எருக்கத்தம்புலியூர் மக்களும் பாணரின் பெருமையை அறிந்து கொள்ள வேண்டும் என்னும் அரிய உணர்வால் உந்தப்பெற்ற