பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 () 9 பிள்ளையார் அவர்கள் எதிரே பாணரை 'ஐயர்' என்று அழைத் தார் என்று கூறுகிற சேக்கிழாரின், சமுதாய மனநிலையை அறிந்து பாடும் ஆற்றலை வியவாமல் இருக்க முடியாது. மூன்றாவதாகத் தருமபுரம் சென்றபொழுது நிகழ்ந்த நிகழ்ச்சி யைச் சேக்கிழார் கூறும் முறை வியப்பானது. தருமபுரம் பாணரின் தாயார் பிறந்த ஊராகும். தம் ஊராரான அம்மையாரின் தவப்புதல்வர் பிள்ளையாருக்கு யாழ் வாசிக்கின்றார் என்பதை, 'கிளைஞரும் மற்றது கேட்டுக் கெழுவு திருப் பதிகத்திற் கிளர்ந்த ஓசை அளவு பெறக் கருவியில் நீர் அமைத்தியற்றும் அதனாலே அகிலம் எல்லாம் வளர இசை நிகழ்வது...' எனக் கூறினர். இவ்வாறு கூறுவது பிள்ளையாரின் தெய்வப் பாடலின் பெருமையைக் குறைப்பதாகும் என்பதை அவர்கள் அறிந்திருக்க நியாயம் இல்லை. அந்நிலையில் பாணர், அவர்கள் செய்த தவற்றை அறிந்து நடுங்கிப் பிள்ளையாரிடம் யாழில் அடங்காத பண் ஒன்றைப் பாடியருளுமாறு வேண்டினார். பிள்ளையயர் 'மாதர் மடப்பிடியும்' என்ற பதிகத்தைப் பாடினார். பாணர் அதனை யாழில் அடக்க இயலவில்லை. உடனே அப் பெருமகனார், 'இப்பெரியோர் அருள் செய்த திருப்பதிகத்து இசையாழில் ஏற்பன் என்னச் செப்பியது இக்கருவியை நான் தொடுதலினன்றோ? 7夺 என்று நினைந்து யாழை முறித்துவிட அதனை ஓங்கினார். உடன் இருந்த பிள்ளையார் அதனைத் தடுத்தருளி, ‘ஐயரே உள்ள இசை அளவினால் நீர் ஆக்கிய இக் கருவியினைத் தாரும்'.. 7 I என்று கூறிக் கையில் வாங்கிக் கொண்டு. 'ஐயர் நீர் யாழ் இதனை முறிக்குமது என்: * 2 - என்று கேட்டு, இறைவன் புகழை விரிக்கும் இசை, கருவியில் அடங்கும் என்று எதிர்பார்ப்பது சரியன்று. நீர் முன் போலவே இதனை வாசித்தருளும்' என்று கூறினார். - தருமபுரத்தில் உள்ளவர்கள் முதலில் தம் ஊாககாரப் பெண்ணின் மகனாரைப்பற்றிப் பெரிதாகப் பேசிக் கொண்ட