பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 I 0 பெரியபுராணம் - ஒர் ஆய்வு பிறகு அவரால் பதிகத்தை யாழில் வாசிக்க முடியவில்லை என்பதை மட்டுந்தான் அறிந்திருப்பார்களே தவிர ஏன் வாசிக்க முடியவில்லை என்பதை அறிகின்ற ஆற்றல் பெற்றிருக்க முடியாது. அது முடியாத பொழுது பாணரைப் பற்றிய தவறானதும் மட்டமானதுமான எண்ணம் அவர்களிடைப் பரவி விடுவது நியாயமானதே. அத்தகைய மக்கள் பாணர்மேல் மறுபடி மதிப்பு வைக்கக் செய்யவேண்டுமாயின், அதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. யாருடைய பாடலை அவர் வாசிக்க முடியவில்லை யோ அவரே பாணரை எவ்வளவு பெருமையுடன் நடத்துகின்றார் என்பதைக் காட்டுவது ஒன்றுதான் அந்த வழியாகும். அதற் காகவே பிள்ளையாரை ஒன்றுக்கு இரண்டு முறையாக 'ஐயர்' என்று பாணரை அக் கூட்டத்தார் நிறைந்த இடத்தில் பேச வைக்கின்றார், சமுதாய மக்களின் மனப்பான்மையை நன்கு அறிந்திருந்த தலைமை அமைச்சராம் சேக்கிழார். இனி இரண்டாவதாகக் காப்பியப் புலவர் ஐயர் என்ற சொல்லைப் பயன்படுத்தும் இடமும் இதுபோன்ற ஒர் இடமாகும். சிதம்பரம் வரையில் வந்தும்கூடக் கோயிலினுள் சென்று ஆடவல்லானைத் தொழும் தகுதி தம்பிறவி காரணமாகத் தமக்கு இல்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டார் திருநாளைப் போவார். சிதம்பரத்தைச் சுற்றிவந்து பாடும் அவர் மனத்தில் <ggleTGż gm.gpsų upanrı ilurrgärgnuouqih (Inferiority Complex) குற்றவுணர்வும் (Guilt Complex) பதிந்துவிட்டன என்பதைக் காப்பியப் புலவர் மிக நன்றாக எடுத்து விளக்குகிறார். மைவண்னத் திருமிடற்றார் மன்றில்நடங் கும் பிடுவது எவ்வண்ணம்? என நினைந்தே ஏசற வினொடுந் துயில்வார்’ 'இன்னல்தரும் இழிபிறவி இது தடை என்றெ துயில்வார் என்ற இத்தகைய மனநிலையுடையவரை இறைவனே நேரே வந்து 'நீ கோயிலுக்குள் வா' என்று அழைத்தாலும் வர மறுத்து விடுவார். இந்நிலையில் அவர் மனத்தில் அமைதியுடன் குற்ற உணர்வின்றிக் கோவிலுக்குள் வரவேண்டுமாயின் அவர்தடை என நினைக்கும் இந்த உடம்பு போகவேண்டும். எனவே இறைவன் தில்லை வாழ் அந்தணரிகளிடம் தீ அமைத்து அதில் மூழ்கச் செய்து நந்தனை அழைத்து வருமாறு பணித்தான். அவர்களும் அவன் ஆணையைச் சிரமேற்கொண்டு தீயையும் அமைத்தனர். நாளைப் போவாரிடம் வந்து தாங்கள் தீ அமைத்துள்ளதையும் அதில் அவர் மூழ்கி எழுந்து திருக்கோயில் உள்ளே வரலாம்