பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 பெரியபுராணம்- ஓர் ஆய்வு வாழ்வில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி பாடப் பெறுகிறது. பத்துப்பாட்டில் அதே மன்னன் பாடப் பெறும் பொழுது அவன் வாழ்வில் மேற் கொண்ட பல்வேறு செயல்கள், அவனுடைய நாடு, ஊர் அவற்றின் சிறப்பு ஆகியவை இடம் பெற்றன. புறத்தில் பாடப் பெறும் பொழுது உயர்வு நவிற்சி அணி அதிகம் இடம் பெறவில்லை. ஆனால் நெடும் பாடலில் உயர்வு நவிற்சியும், இயற்கையின் இறந்த நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. கரிகாற்பெருவளத்தானுடைய அரசாட்சியில் வெண்ணிப் பறந்தலையில் அவன் நிழ்த்திய போர் மிகவும் சிறப்பு வாய்ந்தது போலும். வெண்ணிக் குயத்தியார் என்ற புலவர் பெருமாட்டி, சென்றமர்க் கடந்ததின் ஆற்றல் தோன்ற வென்றோய்! நின்னினும் நல்லன் அன்றே கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை மிகப் புகழ் உலகம் எய்திப் புறப்புண் நாணி வடக்கிருந் தோனே' " என்று பாடுகிறார். கரிகாலன் காலத்தும், அவன் இறந்த பின்னரும் @ಠ್ಠಳ್ತು அவனைப்பற்றிப் புறத்தில் உள்ள இரண்டு பாடல்களைப்" பாடிய கருங்குழலாதனார் என்ற புலவர், தாம் பாடிய இரண்டு பாடல்களிலும் வெண்ணிப்பறந்தலைப் போரைக் குறிக்கவில்லை. அவனுடைய போர் செய்யும் வலிமைபற்றிப் பேசும் அவர் 'தாளையும், அடியையும் கையுடனே சாபத்தையும் (வில்லையும்) மார்பையும் உடைய வளவ! நீ கொள்ளை மேவலையாதலின் பிறர் நாடு நல்ல இல்லாவாகும் ' என்ற முறை யில் பாடுகிறார். இவர் பாடிய இரண்டாவது பாடலிலும் வெண்ணிப்போர் பற்றிய குறிப்பே இல்லை. ஆனால் புதிய செய்தி ஒன்றை இவர் தம் பாடலில் குறிப்பிடுகிறார். 'அறம் அறக் கண்ட நெடுமாண் அவையத்து முறை நற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த தூவியற் கொள்கைத் துகள் அறு மகளிரொடு பருதி உருவில் பல்படைப் புரிசை எருவை நுகர்ச்சி ஆப நெடுந்துண் வேதவேள்வித் தொழில் முடித்த தூஉம் ' என்ற பாடலில் மிக விரிவான முறையில் 'கருடசயனம் என்ற பெயரை யுடைய யாக குண்டம் அமைத்து வேள்வி செய்தான் இம்மன்னன்' என்ற புதுச் செய்தியைத் தருகிறார்.