பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 : 1 என்பதனையும் கூற வருகின்றனர். அத்தகைய தொண்டருக்கு இவ்வாறு செய்வதை அவர்கள் விரும்பினார்களா? இல்லையா என்பது இங்கு வினாவன்று! இறைவன் ஆணையை அவர்கள் நிறைவேற்ற வேண்டிய கடப்பாடுடையவர்கள். ஒருவேளை அவர்களுள் சிலர் நாளைப் போவார் உள்ளே வரத் தகுதி இல்லாதவர் என்றுகூட நினைத்திருக்கலாம். ஒரே கல்லில் இாண்டு மாங்காய் அடிப்பதுபோல ஆடவல்லான் தில்லைவாழ் அந்தணர்கள் மனத்திலும் மாற்றத்தை உண்டாக்கி நாளைப் போவார் மனத்திலும் அமைதி உண்டாக்க நினைத்தான் போலும்! எனவே அந்தணர்களிடம் இந்த ஆணையைப் பிறப்பித் தான். இப்பொழுது அதனைச் செய்து முடித்த அவர்கள் நாளைப் போவாரிடம் வந்து பேசுகின்றனர்: ‘ஐயரே! அம்பலவர் அருளால் இப்பொழுது அணைந்தோம் வெய்ய அழல் அமைத்துமக்குத் தரவேண்டி எனவிளம்ப நையுமனத் திருத்தொண்டர் 'நான் உய்ந்தேன்' எனத் - தொழுதார்’ 7 என்று பாடித் தில்லை வாழ் அந்தணர்கள் திருநாளைப் போவாராகிய நந்தனாரை ‘ஐயரே என்று அழைக்குமாறு செய் தவர் சேக்கிழார். . இனி மூன்றாவதாகவும் இறுதியாகவும் இந்தச் சொல் அரிசனர் போலவே தாழ்ந்ததாகக் கருதப் பெறும் சாதியில் பிறந்த மற்றொருவருக்கும் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல் லால் இங்குக் குறிக்கப் பெற்றவர் கண்ணப்பர் என்று பின்னர்ப் பெயர் பெறப்போகும் திண்ணனாராவார். பயன்படுத்தியவர் வேறுயாரும் இல்லை; நூலாசிரியராகிய சேக்கிழாரே யாவார், நாணனுடன் மலையேறும் திண்ணனாரை இவ்வாறு வருணிக் கின்றார் கவிஞர். காரணம் ஒன்றுண்டு. எந்த வினாடியில் காளத்தி மலையைக் கண்டு அதன் மேல் ஏறத் தொடங்கினாரோ அந்த வினாடியே நாகன் மகன் திண்ணன் என்ற நிலைமை நீங்கிப் பட்டினத்தடிகளும் வியக்கும் படியான செயலைச் செய்பவராக ஆகிவிடுகிறார். எனவே இந்த வினாடியிலேயே அவர் ஐயர் என்ற விளிக்கு உரிமை உடையவராகிறார். எனவே சேக்கிழார், 4 'நானனும் அன்பும் முன்பு தளிர்வரை யேறத்தாமும் பேணுதத் துவங்கள் என்னும் பெருகுசோ பானம் ஏறி ஆணையாம் சிவத்தைச்சார அணைபவர்போல ஐயர் நீனிலை மலையை ஏறி நேர்படச் செல்லும் போதில் என்று பாடுகிறார்.