பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

t; 1 2 பெரியபுராணம்- ஓர் ஆய்வு இதுவரை பெரியபுராணத்தில் ஆறு இடங்களில் 'ஐயர்' என்ற சொல் பயன் படுத்தப்பட்டுள்ளது. இச்சொல் நான்கு முறை யாழ்ப்பாணருக்கும், ஒருமுறை திருநாளைப்போவாருக்கும் த முறை கண்ணப்பருக்கும் பயன் படுத்தப்பட்டுள்ளது. சாதிவேதியர்களால் சாதி அரிசனரைக் குறிக்க இச்சொல் ஐந்து முறை பயன்படுத்தப் பெற்றுள்ளது. ஒருமுறை ஒரு வேடரை நூலாசிரியரே இவ்வாறு குறிக்கிறார். இந்தச் சொல்லைப் பயன் படுத்தவேண்டிய சூழ்நிலை என்ன என்பதும் விரிவாக ஆயப் பெற்றது. சமுதாயப் பழக்க வழக்கங்களைச் சாடுவதற்குச் சேக்கிழார் எவ்வளவு கூர்மையான ஆயுதத்தை எவ்வளவு நுண்மையாகப் பயன்படுத்துகிறார் என்பதையும் இப்பாடல் முலம் அறிய முடிகிறது. வணிகர்கள் குடும்பம் நடத்தும் முறை இனி ஒவ்வொரு இனத்தாருடைய பழக்க வழக்கங்களையும் கூர்ந்து கவனித்து அவர்களைப் பற்றிக் கூறும் வாய்ப்பு ஏற்படும் பொழுதெல்லாம் அப்பழக்க வழக்கங்களையும் சேர்த்துக் கூறுவது இவருடைய இயல்பாகும். கிறிஸ்து நாதர் பிறப்பதற்குப் பன்னூறு ஆண்டுகளின் முன்பு தொட்டே பிறநாடுகளுடன் வாணிகஞ் செய்யும் சமுதாயத்தார் தமிழகத்தில் நிரம்ப உண்டு. இந்த வாணிபத்தின் உயிர் நாடியாக இருப்பது நாணயம் என்ற பண்பாகும். இன்றுள்ள வணிகர்கட்கும் வேண்டப்படுவது வாக்கு சுத்தம், நாணயம் என்று கூறுகிறார்கள். பங்கு மார்க்கட்டுகளில் அன்றாடம் கோடிக்கணக்கான பணத்துக்கு நடைபெறும் பங்கு வாணிகம், நாணயம் ஒன்றையே நம்பி நடைபெறுகிறது என்பதை அறியமுடியும். எனவே வணிகர்கட்கு வேண்டப்படுபவை முதலாவது நாணயம். இரண்டாவது முதல். இந்த நாணயம் தோன்றுவதற்கு மூலம் மான உணர்ச்சியாகும். மனிதன் தன் நிலையினின்று தாழாமையே மானம் என்றால் இதன் மூலம் பிறப்பதே நாணயம் என்பதை எளிதில் விளங்கிக் கொள்ளாலாம். இந்த அரிய கருத்தைச் சேக்கிழார் தமிழக வணிக சமுதாயத்தார் பற்றிக் கூறும்பொழுது அவர்களிடம் காணப்பெறும் தலையாய பண்பாக இதனைக் கூறுகிறார். காரைக்கால் அம்மையார் என்று பின்னர் அழைக்கப் பெற்ற புனிதவதியார் காரைக்காலில் பெரு வணிகராகவிருந்த தனதத்தன் என்பவருக்கு ஒரே மகளாகத் தோன்றியவர். இவர் வரலாற்றைக் கூறவந்த கவிஞர் வணிகர் சமுதாயம் முழுவதுக்கும் உள்ள பொதுப் பண்பைக் கூறத் தொடங்குகிறார். அதே