பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 3 பாடலில் இவர்கள் கடல் வாணிபஞ் செய்பவர்கள் என்றுங் கூறுகிறார். ‘மானமிகு தருமத்தின் வழிநின்று வாய்மையினில் ஊனமில் சீர்ப் பெருவணிகர் குடிதுவன்றி ஒங்குபதி கூனல்வளை திரை சுமந்து கொண்டேறி மண்டு கழிக் கானல் மிசை உலவுவளம் பெருகுதிரு காரைக்கால் ' மானத்தோடுகூடிய அறத்தின்வழி நிற்பவர்கள் அவர்கள். மானம், அறம், வாய்மை என்ற வரிசையில் அவை ஒன்றுக் கொன்று தொடர்புடையதாய், ஒன்றிலிருந்து ஒன்று கிளைப் பதாய் உள்ள முறை பிறநாட்டாரோடு வாணிகஞ் செய்யும் மனிதர்கட்கு மிகவும் தேவை. மேலும் கூனல்வளை கழியின் கானவில் வந்து உலவுகிறது என்ற வருனனையில் பிற நாட்டி லிருந்து கொணரும் பொருளால் இவர்கள் நடாத்தும் வளமான வாழ்க்கையையும் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். வாணிகத்தில் ஈடுபட்டிருந்த இந்த இனத்தார் மணஞ் செய்து கொள்ளும் பொழுது பொருளைச் நிரம்பச் சீதனமாகப் பெற்றுக் கொள்ளும் பழக்கம் உடையவர்கள் என்பதைக் கவிஞர் புனிதவதி யாரை மணந்தவரைப்பற்றிக் கூறும் பொழுது வெளியிடுகிறார். பண்பாட்டில் மிகுந்த இந்த அருமையான பெண்ணை மனைவி யாகப் பெற்றதைக் காட்டிலும் பெண்ணின் தந்தையார் சீதனமாகக் கொடுத்த பொருளிலேயே கணவன் மகிழ்ச்சியடைந் தான் என்பதைக் கவிஞர் அழகுறச் சொல்லிக் காட்டுகிறார். 'மகட் கொடையின் மகிழ்சிறக்கும் வரம்பில்தனம் கொடுத்ததன் பின்' என்று கூறுவதால் புனிதவதியாரை மனைவியாகப் பெற்றதை விடப் பொருளைப் பெற்றதால் பெரிதும் மகிழ்ந்தான் என்பதைப் பெறவைக்கின்றார். இனிப் புனிதவதியாரை மணந்து காரைக்காலிலேயே தங்கித் தனியே வாணிகஞ் செய்யும் பரமதத்தன் என்ற இந்த மணமகன் வாழ்க்கை நடத்தும் முறையும் குறிப்பாகப் பல சொற்களால் வெளிப்படுத்துகிறார் கவிஞர். தமிழகத்தில் வாழும் அனைவரும் காலையில் குளிக்கும் பழக்கம் உடையவராவர். ஆனால் வாணிபஞ் செய்யும் வணிகர்கள் காலையிலேயே கடையைத் திறக்க வேண்டியிருத்தலின் மதியம் உணவுக்கு வீட்டிற்கு வரும் பொழுதான் குளிப்பர் என்பதை, - 'மற்றவர்தாம் போயினபின் மனைப்பதியாகியவ ணிகன் உற்ற பெரும் பகலின் கண் ஓங்கியபேர் இல் எய்தி