பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 1 4 பெரியபுராணம்- ஒர் ஆய்வு பொற்புறமுன் நீராடிப் புகுந்தடிசில் புரிந்தயிலக் - - - * • - z_* !! 8 கறபுடைய மடவாரும கடபபாடடில ஊட்டுவார் என்ற பாடல் மூலம் குறிப்பதைக் காணலாம். சமுதாயத்தில் ஒரு சிலர் இல்வாழ்க்கை, இன்பம் என்பவற்றின் மேலாகப் பொருள் ஈட்டலுக்காகவே உயிர் வாழ்வதாக நினைக்கின்றனர். இத்தகைய ஒருவன் வாழ்க்கையில், மனைவியும் கற்புடைய வராகையால், தம் கடமை தவறாமல் உணவு பரிமாறுகிறார். சமுதாயத்தில் கற்றறிவு உடையவர்கள் பழக்கவழக்கங்கள் அது இல்லாதவரினும் மாறுபட்டிருந்தது சமுதாயத்தில் நிலவிய சாதி வேற்றுமைபோக, அவருள் கற்றறிவுடையவர்கள், அது இல்லாதவர்கள் என்ற பிரிவினையும் இருப்பதை அறிகிறோம். ஒரு சமுதாயத்தார் பிள்ளைகள் பெற்று அவர்களை வளர்க்கும் முறைக்கும், மற்றொரு சமுதாயத் தில் இது நடைபெறுவதற்கும் உள்ள வேற்றுமையைக் கவிஞர் பi i பிடித்துக் காட்டுகின்றார். வேடர் குலத்தவனாகிய நாகன் 3T § Li '? (T, 'குற்றமே குணமா வாழ்வான் கொடுமையே தலை நின்றுள்ளான் இத்தகையவனுக்குக் கடைசிக் காலத்தில் ஒர் ஆண் மகவு பிறக்க அம்மகவுக்குப் பெயர் வைத்த முறையைக் கூறு கிறார். நீண்ட காலங் கழித்துப் பிறந்த குழந்தையை ஆசை யுடன் வந்து தூக்கினான் தந்தை. குழந்தை 'திண்' என்று கனமாக இருந்தமையின், 'அண்ணலைக் கையில் ஏந்தற்கு அருமையால் உரிமைப் பேரும்... திண்னன் என்றியம்பும் " என்ற பெயர் வைத்துவிட்ட சமுதாயம் அது. இதன் எதிராகக் குழந்தை பிறந்து சூதகம் என்னும் தீட்டுக் காத்துப் பத்து நாள் ஆனவுடன், 'நாமகரணத் தழகு நாள்பெற நிறுத்தி

  • * * * * * * * * * * * * * * * * *

காமணி நிரைத் தணி செய் தொட்டில் அமர்வித்தார். '