பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6. I 5 என்ற முறையில் ஏகச் சடங்குகளுடன் திருஞான சம்பந்தருக்குப் பெயரிட்ட சமுதாயமும் இங்கிருந்தது. கற்றவர்கள் கல்லாதவர்கள் குழந்தை வளர்க்கும் முறைகள் இந்தக் குழந்தைகள் எந்தச் சமுதாயத்தில் பிறந்தனவோ அந்தச் சமுதாயத்தின் கல்விப் பெருக்கம் முதலியவற்றிற்கேற்பக் குழந்தைகட்குக் கல்வி புகட்டப் பெற்றது என்றும் கவிஞர் கூறுகிறார். வேளாளச் சமுதாயத்தில் பிறந்த நாவரசருக்கு மயிர் நீக்கும் வினை (மொட்டை அடித்தல்) நிகழ்த்திய பிறகு கலைகள் கற்பிக்கத் தொடங்கினார்கள் என்பதைக் கவிஞர், மருணிக்கி யார் சென்னி மயிர் நீக்கும் மன வினையும் தெருணிர்பன் மாந்தரெல்லாம் மகிழ்ச்சிறப்பச் செய்ததற்பின் பொருணித்தம் கொளவீசிப் புலன் கொளுவ மனம் முகிழ்த்த கருணிக்கி மலர்விக்கும் கலைபயிலத் தொடங்கினார் என்ற பாடலில் கூறுவதைக் காணலாம். அந்தணர் குலத்தில் பிறந்தவரும் பின்னர் சண்டேசுரர் எனப் பெயர் பெறப் போகிற வருமான விசாரசருமர் காசிப கோத்திரத்தானாகிய எச்சதத்தன் என்பவன் மகனாகப் பிறந்தவர். அவரை வளர்த்த முறையைக் கூறவந்தக் கவிஞர், 'ஐந்து வருடம் அவர்க்கனைய அங்கம் ஆறும் உடன்நிறைந்த சந்தமறைகள் உட்பட முன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரின் வாசம்போல் சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால்......'" என்றுங் கூறுவதால் அந்நாளையச் சமுதாய வாழ்க்கை முறையை நன்கு அறிய முடிகிறது. கற்றவர்களான மேட்டுக் குடிமக்கள் தம் பிள்ளைகளை வளர்த்த முறையையும் கல்வியறி வில்லாத சமுதாயத்தார் பிள்ளைகளை வளர்த்த முறையையும், கவிஞர் மிக நுண்மையாகப் படம் பிடித்துக் காட்டிவிடுகிறார். 41