பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ 1 6 பெரியபுராணம் - ஒர் ஆய்வு வேட்டுவக் குலத்து மன்னனாகிய நாகனுக்கு வயது முதிர்ந்த காலத்தில் பிறந்தவர் திண்ணனார். மழலைப் பேசும் பருவத்தில் ஒருநாள் 'பொருபுலிப் பார்வைப் பேழ்வாய் முழையெனப் பொற்கைநீட்டப் பரிவுடைத் தந்தைகண்டு பைந்தழைகைக் கொண்டு ஒச்ச இருசுடர்க்கு உறுகண் தீர்க்கும் எழில்வளர் கண்ணிர் மல்கி வருதுளி முத்தம் அத்தாய் வாய்முத்தம் கொள்ள மாற்றி " அழுகையை அடக்கும் நிகழ்ச்சி நடந்ததாம். பார்வை விலங்காகக் கட்டப்பட்டிருந்த புலி வாயைத் திறக்கவும், அது கொடிய விலங்கு என்பதை அறியாமல் திண்ணனார் ஆகிய இளங்குழந்தை மெல்ல நடந்து சென்று அப் புலியின் திறந்த வாயைப் பொந்து என நினைத்துத் தன் கையைப் புலியின் வாயினுள் நுழைத்தது. அதனைக் கண்ட நாகன் பதட்டப்படாமல், ஆனால் இம்மாதிரிச் செயலைக் குழந்தை மறுபடியும் செய்துவிடக் கூடாது என்ற எண்ணத்தால் பக்கத்தில் கிடந்த பசிய தழையை எடுத்து ஓங்கிக் கொண்டு பிள்ளையை அதட்டினான். அதுகூடப் பொறுக்காத அந்தக் குழந்தை கண்ணிர்விட்டு ஓவெனக் கதறி அழுதது. தாய் ஓடிவந்து குழந்தையின் அழுகையை நிறுத்தினாள். புலியின் வாயில் கையை நுழைப்பது எவ்வளவு ஆபத்தான செயல். மறுமுறை இத்தகைய தவறு நடைபெறாமல் தந்தை கடுமையான தண்டனை தந்து பிள்ளையைத் திருத்தியிருக்க வேண்டும். ஆனால் கல்வியறிவில்லாத அத்தந்தை குழந்தையின் எதிர் காலத்தில் இத்தகைய தவறு நிகழக்கூடாது என்னுங் கருத்தால்: கடிய தண்டனை விதிப்பதை விட்டுவிட்டுத் தழையைக் கொண்டு ஓங்கினான்; அடிக்கக்கூட இல்லை. குழந்தை உயிருக்கே ஊறு. விளைவிக்கும் பெருந்தவறு செய்தும் அத்தந்தை அதனைப் பெரி தாகப் பாராட்டவில்லை. இதன் எதிரான ஒரு நிகழ்ச்சியையுைம் கவிஞர் காட்டுகிறார். அந்தணராகவும் கல்வி நிரம்பியவராகவும், ஆசார சீலராகவும்: உள்ள சிவபாத இருதயர் குளத்திற்குக் குளிக்கச் செல்கையில் 'உடன் வருவேன்' என்று அழுது அடம்பிடித்த குழந்தையை அழைத்துச் சென்றார். கரையில் இருந்த பிள்ளை, தண்ணிருள்