பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 1 7 மூழ்கிய தந்தையைக் காணாமல் அழத்தொடங்கிற்று. தம் மேலைச் சார்புணர்ந்து குழந்தை அழலும் திருத்தோணிபுரத் துறை பெருமான் அண்டங்கள் அனைத்தையும் ஈன்று புரக்கும் அன்னையுடன் அங்குத் தோன்றினான். அன்னை பொற் கிண்ணத்தில் திருமுலைப்பாலை வழங்கினார். குழந்தை அதனை உண்டமையின் தம்பவத் தொடக்கை அறுத்தவராய், 'சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம், பவமதனை அறமாற்றும் பாங்கினில் ஓங்கியஞானம் உவமையிலாக் கலைஞானம், உணர்வரிய மெய்ஞ்ஞானம், தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்...... 8感 என்று கூறும் நிலை எய்தி நின்றார். உண்ட பால் கடைவாய் வழி சோர நின்றார் பிள்ளை. குளியலை முடித்துக் கரைக்கு வந்த தந்தையார் குழந்தையையும், அதன் பால்சோர நின்ற வாயையும் கவனித்துவிட்டார். இன்னார் என்று தெரியாதவர் களிடம் எச்சில் பாலைக் குழந்தை பெற்று உண்டு விட்டதாக நினைக்கின்றார். பாலுக்குத் தீட்டு இல்லை என்பது அன்றைய நாளிலும் நம்பிக்கைதான் என்றாலும் இன்னார் என்று அறியாத பிறரிடம் ஒன்றை வாங்கி உண்பது தவறு; அது பாலாகவே இருப்பினும் தவறு தவறுதான்; ஆனால் மன்னிக்க முடியாத பெருந்தவறு அன்று. 'குழந்தாய்! இனி இவ்வாறு கண்டவர்களிடம் எதனையும் வாங்கி உண்ணாதே' என்று சொல்லியிருந்தாற்கூடப் போதுமானதாகும். என்றாலும் கற்ற றிந்த பண்பாடுடையவர்கள் குழந்தை சிறு தவறு செய்தாலும் பின்னர் இத்தகைய சிறு தவறும் நேரக்கூடாது என்ற கருத்தால் அதிகமாகக் கண்டித்து வளர்க்க முற்படுகின்றனர். இப்பொழுது கற்றறிந்த தந்தை குழந்தை செய்ததாகத் தன்னால் நினைக்கப் பெற்ற சிறு தவற்றைக் கண்டிப்பதற்காகக் கையில் ஒரு குச்சியை எடுத்துக்கொண்டு கண்டித்தார் என்ற கருத்தில், ‘எச்சில்மயங்கிட உனக்கீது இட்டாரைக் காட்டு என்று கைச்சிறிய தொருமாறு கொண்டோச்சக் காலெடுத்தே அச்சிறிய பெருந்தகையார் ஆனந்தக் கண்துளிப்பெய்து உச்சியினில் எடுத்தருளும் ஒருதிருக்கை விரல் சுட்டி' " என்ற பாடலை அமைக்கின்றார். பிள்ளை செய்தது. மிகச் சாதாரணமான காரியம். பாலை யார் தந்தாலும் அதனைக் குழந்தை பெற்றுக் குடிப்பது அப்படியொரு மன்னிக்க முடியாத குற்றமன்று. என்றாலும் தம் சமுதாய மரபுக்கு ஏற்பப் பிள்ளையை வளர்க்க வேண்டும் என்று கருதிய கற்றறிவுடைய