பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 I 8 பெரியபுராணம்- ஓர் ஆய்வு தந்தை குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு குழந்தையைக் கண்டிக்கத் தொடங்கிவிட்டார். எனவே சமுதாயத்தில் மக்கள் எந்த முறையில் இத்தகைய பழக்க வழக்கங்களைக் கைக்கொண் டிருந்தனர் என்பதனைக் காப்பியக் கவிஞர் மிக நுண்மையாக எடுத்துக் காட்டுகின்றார். ஒவ்வொரு சமுதாயத்தையும். எத்துணைத் தூரம் கூர்ந்து கவனித்திருந்தால் இவ்வாறு பாட முடியும் என்பதைச் சிந்திக்க வேண்டும். ஒரே ஊரின் செல்வச் செழிப்பான பகுதியும், வறியர் வாழும் பகுதியும் காட்டப்படல் ஒரு பேரரசின் தலைமை அமைச்சராக இருந்த ஒருவர், மேட்டுக் குடிமக்களின் வாழ்க்கை முறைகளைக் கவனித்திருந்த திலும், எழுத்தில் வடித்ததிலும் வியப்பு ஒன்றும் இல்லை! ஆனால் பரதவர், அரிசனர்கள் என்பவர்களின் வாழ்க்கை முறை களையும் தொழில் முறைகளையும் நுனித்துக் கண்டு எழுதுவது வியப்பேயாகும்! * நாகப்பட்டினத்தில் வாழ்ந்த அன்பர் அதிபத்தர் என்ற பரதவராவார். நாகப்பட்டினம் துறைமுகமாகவும், சோழர் காலத்தில் சிறப்புப் பெற்ற நகரமாகவும் இருந்து வந்தது. துறைமுகமாக இருந்தமையின் ஏற்றுமதி, இறக்குமதி நடை பெற்றுச் செல்வங் கொழிக்கும் நகரமாகவும், வாணிபம் பெருகிய நகரமாகவும் இருந்தமையின் பல்வேறு நாட்டு மக்களும் வந்து தங்கிய இடமாக விளங்கிற்று என்றும் கவிஞர் கூறுகிறார். 'நீடுதொல் புகழ் நிலம் பதினெட்டிலும் நிறைந்த பீடு தங்கிய பலபொருள் மாந்தர்கள் பெருகிக் கோடி நீள்தனக் குடியுடன் குவலயங் காணும் ஆடி மண்டிலம் போல்வதவ் வணிகிளர் மூதூர்' " என்ற முறையில் பன்னாட்டு மக்களும் surroupið (Cosmopoliton City) நகரமாக இருந்தது. 'கரி, பரித்தொகை, மணி, துகில் சொரிவதாம் கலத்தால் ' என்றமையின் கடல் வாணிகம் குதிரைகள், யானைகள், பொன் மணிகள், துணிகள் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு நடைபெற்றன என்றுங் கூறும் இக் கவிஞர், அதே வரலாற்றில் நான்கு பாடல்கள் கடந்து இந்த மேட்டுக் குடியைச் சேர்ந்த பன்னாட்டு மக்களும் வாழும் இதே ஊரில் ஏழைகளாகிய பரதவர்