பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 I 3 களும் வாழ்ந்தனர் என்று கூறிவிட்டு அவர்கள் தொழில் நடை பெறும் முறையையும் விரிவாகக் கூறுகிறார். பெரிய படகுகளில் கூட்டமாகச் செல்லும் பரதவர் பெரிய வலைகளை விரித்துவிட்டுக் கரையை அடைந்து அந்த வலைகளின் பெரிய வடக் கயிற்றை இழுத்து அதில் வரும் மீன்களைப் பிடிப்பதைச் சென்னை போன்ற கடற்பட்டினங்களில் இன்றுங் காணலாம். ஆயிரம் ஆண்டுகட்கு முன்னருங்கூட இத் தமிழ் நாட்டில் பரதவர் தொழில்முறை இதே முறையில்தான் நடைபெற்றது என்பதைச் சேக்கிழார் பாடல் கொண்டு அறிய முடிகிறது. 'வலைநெ டுந்தொடர் வடம்புடை வலிப்பவர் ஒலியும் விலைப கர்ந்துமீன் குவை கொடுப்பவர் விளிஒலியும் தலைசிறந்தவெள் வளைசொரி பவர் தழங் கொலியும் அலைநெ டுங்கடல் அதிரொலிக் கெதிரொலி அனைய ’’ என்பதால் கடற்கரையில் ஒரு கூட்டத்தார் பாடல் பாடிக் கடலில் போட்ட வலையின் வடக் கயிற்றை இழுப்பதன் மூலம் உண்டாக்கும் ஒலியும், முன்னரே கரை சேர்ந்தவர்கள் தங்கள் மீன் குப்பல்களை அங்கேயே விலைபேசி விற்கும் ஒலியும், இன்றும் நாம் கண்டு கேட்பதாகும். அந்த நகரத்தின் செல்வச் செருக்கு இப் பரதவர் வாழ்க்கையைப் பாதித்ததாகவே தெரியவில்லை. சுந்தரர் வாழ்ந்த எட்டாம் நூற்றாண்டு வரையிலும் ஒரு சிலரை ஒரு சிலர் கொத்தடிமைகளாகக் கொள்ளும் பழக்கம் இருந்ததாகவே நினைய வேண்டியுள்ளது. போர்மேற் சென்ற மன்னர் தாம் வெற்றி கொண்ட நாட்டில் வாழும் மகளிரைச் சிறைசெய்து கொணர்ந்து அடிமைகளாகப் பயன்படுத்தினர் என்று கல்வெட்டுக்களால் அறிகின்றோம். கொத்தடிமைகள் என்று கூறப்பெறுபவர்கள் தாங்கள் மட்டும் அடிமைகளாக இல்லாமல் தம் சந்ததியாரும் அதே நிலையில் இருக்குமாறு செய் தனர். கிரேக்க, உரோமானிய நாடுகளில் இது நடைபெற்றதை அந்நாட்டு வரலாறுகள் மூலம் அறியமுடிகிறது. சேக்கிழார் கால மாகிய பன்னிரண்டாம் நூற்றாண்டிலும் இப்பழக்கம் இருந்ததா? என்பதை அறியக் கூடவில்லை. என்றாலும் மனிதர்கள் வேறோர் மனிதருக்கு அடிமையாதல் தவறான வழக்கம் என்று சேக்கிழார் கருதினதாகத் தெரியவில்லை. புண்ணியஞ் செய்தவர் பல்லக்கில் செல்வர், பாவஞ் செய்தவர் அப் பல்லக்கைச் சுமந்து செல்வர் என்ற பழைய நம்பிக்கையின் அடிப்படையில் இந்த அடிமை முறையும் பிறந்ததாகலின் யாரும் இதன் கொடுமையை