பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 0 பெரியபுராணம்- ஓர் ஆய்வு உணர்ந்ததாகத் தெரியவில்லை. சுந்தரர் வரலாற்றில் பேசப் பெறும் ஒரு சில கருத்துக்கள் இதனை வலியுறுத்துகின்றன. "ஆசில் அந்தணர்கள் வேறு ஒர் அந்தணர்க்கு அடிமை ஆதல் பேச இன்று உன்னைக் கேட்டோம் பித்தனோ மறையோய்?" என்றுதான் அவர்கள் பேசுகிறார்கள். எனவே அந்தணன் அடிமையாதல்தான் புதுமையே தவிர ஏனையோர் அடிமையாதல் இயல்பானது என்பது அருத்தாபத்தியால் பெறப்படும். இந்தப் பழக்கத்தின் அடிப்படையில்தான் மனிதர்களை விலை கூறி விற்கின்ற பழக்கமும் இருந்திருத்தல் வேண்டும். கலியர் என்பவர் எண்ணெய் ஆட்டி அதில் வரும் பொருள் கொண்டு அன்பர் தொண்டு செய்தவராவார். வறுமை வந்த வுட்ன் முதலாளியாக இருந்ததுபோகக் கூலிக்கு எண்ணெய் ஆட்டி விற்றும் கூலி வேலையும் கிடைக்காமற் போனவுடன், 'ஒப்பில்மனை விற்று எரிக்கும் உறுபொருளும் மாண்டதற்பின் செப்பருஞ்சீர் மனைவியாரை விற்பதற்குத் தேடுவார் மனம் மகிழ்ந்து மனைவியார்தமைக் கொண்டு வளநகரில் தனம் அளிப்பார் தமை எங்கும் கிடையாமல் தளர்வெய்தி ' என்ற முறையில் மனைவியை அடிமையாக விற்க மிகவும் மகிழ்ச்சி யுடன் புறப்பட்டார் என்கிறார். மனிதனை மனிதன் அடிமை யாகக் கொள்வதையும், அடிமைகளாகச் சிலரை விற்பதையும் அன்றையத் தமிழ்ச் சமுதாயம் ஏற்றுக் கொண்டிருந்தது என அறிகிறோம். கொத்தடிமை என்ற சொல்லையும் தாயுமானவர் பராபரக் கண்ணியில் பயன்படுத்துகிறார் என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். தமிழ்நாட்டு மரபை மீறிக் கணவன் பெயரைக் குறிப்பிடாமல் பிறந்த வீட்டுடன் சேர்த்துப் பேசுவதன் நோக்கம் நாட்டு மரபையும், சமுதாய மரபையும் நன்கு அறிந்து பாடுபவர் சேக்கிழார் என்பதை இதுவரைக் கூறியவற்றால் நன்கு அறியலாம். அப்படிப்பட்ட ஒருவர் மரபை மீறிப் பாடுவாரே யானால் அந்த இடங்களில் நின்று நிதானித்து ஏன் என்ற வினாவை எழுப்பினால் சில உண்மைகள் தெற்றன விளங்கும். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் பண்டு தெர்ட்டே சில மரபுகள் விடாமல் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன. ஒரு பெண் எத்துணைப்