பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 37 1 கரிகாலனைப்பற்றியே பத்துப்பாட்டுள் இரண்டு நெடும் பாடல்கள் உள்ளன. என்றாலும் அவற்றுள் ஒன்றுகூட இவன் வேள்வி செய்ததைக் குறிப்பிடவே இல்லை. பொருநராற்றுப் படை வெண்ணிப் பறந்தலைப் போரைப்பற்றி விரிவாகப் பேசுவ துடன் அப்போரில் இவனை எதிர்த்தவர்களின் பட்டியலையும் தருகின்றது'. வெண்ணிப் பறந்தலையில் நிகழ்ந்த போரை, 'ஆர்கலி நறவின் வெண்ணிவாயில், சீர்கெழு மன்னர் மறலிய ஞாட்பின், இமிழிசை முரசம் பொருகளத்து ஒழிய, பதினொரு வேளிரொடு வேந்தர் சாய, மொய் வலி அறுத்த ஞான்றைத் தொய்யா அழுந்துர் ஆர்ப்பினும் பெரிதே' என்று பரணர் அகத்தில் பாடுகிறார். இவற்றிலிருந்து ஒன்றை அறிந்து கொள்ள முடியும். அளவாற் சிறிய அகப் புறப் பாடல்களில் இடம் பெறும் ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சியை நெடும்பாடல்களில் விரிவாகப் பாடும் மரபுஅன்றே தோன்றிவிட்டது. ஆனால் ஒர் அரசனைப் பல புலவர்கள் பாடி னாலும், அனைவரும் அவன் வாழ்வில் நடந்த ஒரே செய்தியைக் குறிப்பிடுவர் என்று எதிர்பார்க்க முடியாது. அகநானூற்றில் வெண்ணிப் பறந்தலைப் போரும் அதன் விளைவும் உவமையாகப் பேசப் பெற்றன. புறத்தில் ஒரு பாடலும், பொருநராற்றுப் படை யும் இப்போரை விரிவாகப் பேசுகின்றன. ஆனாலும் அவனைப் பற்றிப் பேசும் பட்டினப்பாலை இப் போரைத் தனியே குறிப்பிட வில்லை என்பதையும் அறிதல் வேண்டும். இதன் காரணம் யாதாக இருக்கும்? பல்வேறு புலவர்கள் ஒரு பெரிய அரசனுடைய ஆட்சிக்காலத்தின் பல்வேறு காலங்களில் அவனைப்பற்றிப் பாடிச் சென்றனர். அவர்கள்பாடும் அந்தக் கால கட்டத்தில் எந்த நிகழ்ச்சி அண்மையில் நடந்ததோ அதுபற்றிப் பாடுவது இயல்பே. பத்துப்பாட்டுள் ஏனைய பாடல்கள் விரிவாகச் செய்ய இயலாத ஒரு காரியத்தை பட்டினப்பாலை விரிவாகச் செய்தது. கரிகாலனுடைய ஆட்சிமுறை, அவன் காலப் பொருளாதார நிலை, வாணிபம் , ஏற்றுமதி, இறக்குமதிப் பொருள்கள், சுங்கம் விதிக்கும் பழக்கம், மக்களின் வாழ்க்கை முறை என்பவற்றை ஒரளவு விரிவாகக் கூறிச் சென்றது இப் பாடல். ஒரு தனி மனிதனைப் பற்றிப் பாடப் பெறும் நெடும் பாடலில் இத்தகைய செய்திகளைக் கூறும் இயல்பைப் பட்டினப் பாலையில்தான் முதன் முறையாகக் காணமுடிகிறது. பின்னர்த் தனி மனிதர்களைப் பற்றிக் காப்பியம் தோன்றுவதற்கு இந்த