பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 2.1 பெரிய வளமான இடத்தில் பிறந்தவளாயினும், திருமணம் ஆகிவிட்ட பிறகு இன்னார் மகள் என்று குறிப்பிடப்படுவதே இல்லை. புகுந்த இடம் எத்துணை வளமற்ற சாதாரண குடியாயினும் மணந்தவன் பெயருடன் அவள் பெயரும் தொடர்பு படுத்திப் பேசப்படுமே தவிரத் தந்தையின் பெயருடன் சார்த்திப் பேசப் பெறும் மரபு இல்லை. மங்கையர்க்கரசியார், சோழ மன்னன் மகளாயினும், நின்றசீர் நெடுமாறன் என்ற பெரு வீரனாகிய பாண்டியனை மணந்தவராவார். இவன் சமண மதத்தைச் சார்ந்து நின்றவானாவான். மாபெரும் சிவபக்தை யாகிய இந்த அம்மையார் சமணனாகிய மன்னனை மணக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று என்றால் அதன் காரணம் யாதாக இருக்கும்? சோழன் பெயரளவில் மன்னனாக இருந்தானே தவிர வேறு அவனிடம் ஒன்றும் இல்லை. எனவே பெருவீரனாகிய பாண்டியன், மகளைக் கேட்டவுடன் சிவபக்தையாகிய தன் மகளைச் சமணனாகிய பாண்டியனுக்கு மணஞ் செய்து தந்துவிட்டான். அரசியலடிப்படையில் நடைபெற்ற திருமணமாகும் அது. சோழன், அவன் மகளார், பாண்டி நாட்டின் தலைமை அமைச்சர் ஆகிய மூவருமே சிவபக்தர்கள். தனக்கு மிக நெருக்க மான மனைவி, மாமனார், அமைச்சர் ஆகிய மூவருமே தன் சமயத் துக்கு எதிரான சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாக இருந்தும் இந்த மன்னன் அதுபற்றிக் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அன்றைய சமுதாயத்தில் இத்தகைய ஒரு நிலை இருந்து வந்தது என்பதையும் அறிதல் வேண்டும். தன் மனைவியும், அமைச்சரும் சிவவழிபாட்டில் ஈடுபட்டிருப் பதையும் அவன் தடை செய்யவில்லை. அரசியலில் சமயத்தைக் கலக்கத் தேவை இல்லை என்று இற்றைநாளில் சில அறிஞர்கள் கூறுவதை இத் தமிழ்நாட்டில் அன்றே கண்டு அதனை மேற்கொண்டும் ஒழுகினர் என்று கூறத் தடை இல்லை. அரசனு டைய பரந்த மனப்பான்மையை இது அறிவிக்கின்றது. ஆகலின் அன்றையத் தமிழர் வாழ்க்கையில் இது ஒரு நல்ல பகுதியாகும் என்று கோடலில் தவறு இல்லை. பாண்டியன் சமணனாக இருப் பினும் கணவன் மனைவியர் இடையே எவ்வித மனவேறுபாடும் இல்லாமல் அவர்கள் வாழ்ந்தனர் என்பதை அறியமுடிகிறது. இவ்வாறு இருந்தும் சேக்கிழார் மங்கையர்க்கரசியாரைக் குறிக்கும் இடங்கள் அனைத்திலும் பாண்டிமாதேவி என்று கூற மனம் ஒருப்படாமல் சோழர் தம் மகளார் என்றே கூறிச் செல்வதைக் காணலாம். அமைச்சர் குலச்சிறையார் பிள்ளை யாரை எதிர் கொள்ளச் செல்கின்றார். அவருடைய தொண்டர்