பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 22 பெரியபுராணம்- ஓர் ஆய்வு குழாத்தைக் கண்டவுடன் கீழே விழுந்து வணங்கியவர் யார் சொல்லியும் எழவே இல்லை. பிள்ளையார் இன்னார் வந்துள் ளார் என்பதையும் அறிந்தவுடன் சிவிகையிலிருந்து இறங்கி வந்து குலச் சிறையாரைக் கைகளினால் தூக்கி நிறுத்தி அவருடன் உரையாடுகின்றார் எனக் கூற வரும் கவிஞர், 'செம்பியர் பெருமான் குலமகளார்க்கும் திருந்திய சிந்தையீர் உமக்கும் நம்பெருமான் தன் திருவருள் பெருகும் நன்மை வாலிதே என்று பிள்ளையார் கூறினார் என்றுதான் பாடுகிறார். இனி ஊருக்குள் வந்து ஆலவாய் அண்ணல் திருக்கோயிலினுள் நுழைந்த பிள்ளையாரைப் பாண்டி மாதேவியார் கண்டு கீழே ழுந்து வணங்குகிறார். வணங்கும் அம்மையாரை இன்னார் என்று அமைச்சர் அறிமுகம் செய்து வைக்கின்றார் என்று கூறும் கவிஞர், 'பருங்கை யானைவாழ் வளவர்கோன் பாவையார்’ என்றே அறிமுகஞ் செய்தார் என்று கூறுகிறார். இரண்டு மிக முக்கியமான இடங்களிலும் பாண்டிமாதேவி என்று கூறாமல் சோழன் மகள் என்று திருமணமான ஒருவரைப்பற்றிப் பேசுவது மரபு கடந்த செயலாகும். இச் சமுதாய மரபை கவிஞர் வேண்டு மென்றே மீறுகிறார். ஏன் இவ்வாறு செய்யவேண்டும் என்ற வினாவை எழுப்பினால் தக்க விடை கிடைக்கிறது. இந்த மரபு மீறலுக்கு வழிகாட்டியவர் திருஞானசம்பந்த ராவார். அவருடைய கருத்துப்படி அங்கயற்கண்ணி ஆட்சிபுரிந்த மதுரையம்பதியில் அவளருளால் அரசு வீற்றிருக்கும் மன்னன் ஒருவன் அவன் தமிழனாக இருப்பானேயானால் சைவனாகத்தான் இருத்தல்வேண்டும். களப்பிரரை முதலில் வென்று தமிழகத்தின் தென்பகுதியை மீட்டவன் பாண்டியனேயாவான். ஒருமுறை மீட்கப் பெற்ற நாட்டில் மறுபடியும் சமணம் புகவிட்டுவிட்டான் நெடுமாறன். எனவே அவன் மாபெருந் தவறு செய்துவிட்டான் என்றாலும் மங்கையர்க்கரசியாரை மணந்து, அவர் சைவராக வாழவும் இடங்கொடுத்துள்ளானாகலின் அவனுடைய நாட்டிற்கு வர ஒருப்படுகின்றார். அன்றியும் தாம் இந்த உலகில் பிறந்ததே இப் பரசமயத்தை இந் நாட்டிலிருந்து ஒட்டவேண்டும் என்பதற் காகத்தானே? அப்படியானால் அந்த அரும்பணி நடைபெற மங்கையர்க்கரசியாரே காரணமாகலின் அவரைப் புகழ நினை கின்றார். எத்தகைய மனிதரையும் அவர் அடியாராக இல்லை யெனில் தம் பாடலில் வைத்துப்பாடாத பிள்ளையார் பாண்டி மாதேவியைப்பற்றி ஒரு முழுப்பாடலே பாடுகின்றார். ஆலவாய்ச்

  • 9 :

9 &