பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய சாழ்க்கை 6 2.3 சொக்கன் அங்கயற்கண்ணி தன்னொடும் அன்றுவரை ஆலவாயில் இருக்கிறான் என்றால் அதற்குரிய காரணம் மங்கையர்க்கரசி யாரே யாவார். எனவே அந்த அம்மையாரின் பெருந் தொண் டினைப் பாராட்டும் முறையில் பிள்ளையார், 'மங்கையர்க்கரசி வளவர்கோன் பாவை வரிவளைக் கைம்மடமானி பங்கயச் செல்வி பாண்டிமாதேவி பணிசெய்து நாடொறும் பரவப் பொங்கழல் உருவன் பூதநாயனால் வேதமும் பொருள்களும் அருளி அங்கயற்கண்ணி தன்னொடும் அமர்ந்த ஆலவாய் ஆவதும் இதுவே ' என்று பதிகத்தைத் தொடங்கிப் பாடுகின்றார். இப்பதிகத்தின் ஒவ்வொரு பாடலிலும் மாறி மாறி மங்கையர்க்கரசியாரையும், குலச்சிறையாரையும் புகழ்ந்து பாடியுள்ளார் ஒன்றாவது பாடலும் ஒன்பதாவது பாடலும் கவனிக்கத் தக்கவை. மேலே உள்ள முதல் பாடல்தவிர ஒன்பதாம் பாடலில், “மண்ணெலாம் நிகழ மன்னனாய் மன்னும் மணிமுடிச் சோழன் தன் மகளாம் பண்ணினேர் மொழியாள் பாண்டிமாதேவி....... என்றும் பாடுகிறார். இந்த இரண்டு பாடல்களிலும் அம்மையாரைக் கூறும் பொழுது சோழன் மகளார் என்பதை முதலிற் கூறிவிட்டு, இறுதியில் பாண்டிமாதேவி என்று கூறுவது சற்று வியப்பை அளிப்பதாகும். பாண்டியன் செய்த தவற்றுக்காக, மாபெரும் வீரனாக இருந்தும் தமிழகம் முழுவதை யும் ஒரு குடைக்கீழ் ஆட்சி செய்த அவன் பெயரை முதலிற் கூறப் பிள்ளையார் விரும்பவில்லை. இத்தகைய தவறு செய்யாத சோழனை அவன் சிற்றரசனாக இருப்பினும் மங்கையர்க் கரசியாரை மகளாகப் பெறும் பேறு உடையவனாகலின் அவனைச் சிறப்பித்து முதலில் கூறினார். இதனால் மரபு உடைவதைப் பற்றிக்கூட அச்சிறிய பெருந்தகையார் கவலைப்படவில்லை. இந்த நுணுக்கத்தை நன்கு விளங்கிக் கொண்டமையின் சேக்கிழாரும் பிள்ளையாரை அடியொற்றி மரபை உடைத்துப் பாடிவிட்டார் என்பதை அறிதல் வேண்டும்.

  • 9 5

மலை நாட்டு மக்கள் பழக்க வழக்கங்கள் - தமிழ்நாடு என்ற பொதுப் பெயருள் அடங்குமேனும் இன்று கேரளம் எனப்படும் மலைநாட்டுப் பழக்க வழக்கங்கள் மரபுகள்