பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 24 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்பவை செந்தமிழ் நாட்டினும் வேறானவை என்பதை ஒரே நிகழ்ச்சி இரண்டு இடங்களிலும் நடைபெறுவதைக் காட்டுவதன் மூலம் இந்த இரு சமுதாயங்களிடையே உள்ள வேறுபாட்டையுங் காட்டியிருக்கிறார். ஆட்சி செய்யும் அரசன் தனக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்குரிய வாரிசு இல்லாத நிலையில் றந்துவிட்டாலோ அன்றி ஆட்சியைத் துறுந்து, துறவு மேற் காண்டாலோ மற்றோர் அரசனை நியமிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிடுகிறது. இத்தகைய சூழ்நிலை சேர நாட்டிலும் தமிழ்நாட்டிலும் உண்டானபொழுது இது எவ்வாறு அந்த அந்தச் சமுதாயத்தாரால் நேர் செய்யப்பட்டது என்பதைக் காப்பியப் புலவர் அழகாக எடுத்துக் கூறுகிறார். - பாண்டி நாட்டில், 'மும்மைத் தமிழ் தாங்கிய முதுராகிய மதுராபுரியில் ஏதோ ஒரு பாண்டியன் ஆட்சி செய்கையில், கானக் கடிது.ழ் வடுகக் கருநாடர் காவல் மானப் படை மன்னன் வலிந்து நிலங் கொள்வானாய் யானைக் குதிரைக் கருவிப் படைவீரர் திண்தேர் சேனைக் கடலும் கொடு தென்திசை நோக்கிவந்தான். 'வந்துற்ற பெரும்படை மண்புதையப் பரப்பிச் சந்தப் பொதியில் தமிழ் நாடுடை மன்னன் வீரம் சிந்தச் செரு வென்று தன்னானை செலுத்துமாற்றால் கந்தப் பொழில் சூழ்மது ராபுரி காவல் கொண்டான்' இவ்வாறு நடைபெற்றுவிட்டது. வந்தவன் கருநாடகத்திலிருந்து வந்த களப்பிரன் என்பதும் விளங்குகிறது. இவன் சமண சமயத் தைப் பின்பற்றியதோ டல்லாமல் பாண்டிநாட்டில் வாழ்ந்த சைவர்கட்குப் பேரிடையூறு செய்தான் என்றும் கூறுகிறார். கடுங்கோன் என்ற பாண்டியன் களப்பிரரை ஒடுக்கியதற்கு முன்னர் இது நிகழ்ந்திருக்க வேண்டும். இந்தச் சமண மன்னன் வாரிசு இல்லாமல் இறந்தானாக அடுத்த மன்னனைத் தேடும் முயற்சியில் பாண்டி அரசைச் சேர்ந்த அலுவலர்கள் முயற்சி மேற் கொண்டனர். புதிய அரசனைத் தேர்ந்தெடுக்கப் பாண்டிநாட்டு மக்கள் மேற் கொண்ட வழியை, 97 இவ்வகை பலவும் எண்ணி இங்கினி அரசர் இல்லை செய்வகை இதுவே என்று தெளிபவர் சிறப்பின் மிக்க மைவரை அணையவேழம் கண்கட்டி விட்டால் மற்றக் கைவரை கைக் கொண்டார்மண் காவல் கைக் கொள்வார்' "