பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 25 என்ற பாடலில் விளக்குகிறார். யானையைக் கண்ணைக் கட்டி விட்டு விட்டால் அது யாரைத் தன் பிடரியில் ஏற்றிக் கொள் கிறதோ அவர்களே மன்னராவார் என்று தேர்ந்தெடுத்தல் அற்றைநாள் பாண்டி நாட்டு மரபெனத் தெரிகின்றது. இதன் எதிராக மலைநாட்டு மன்னன் அரச வாரிசு இல்லாமற்போனால் அப்பகுதி அரச அலுவலர் கூடிப்பேசி அடுத்து அந்தக் கொடிவழியில் யார் இருக்கின்றார்? என்று தேடிப் பார்த்து அவரை அழைத்து முடிசூட்டல் அந்தச் சமுதாய மரபு. மலை நாட்டு மருமக்கட்தாயக் கொடி வழி இன்றுகூடப் பல தலை முறைவரைச் செல்வதாகலின் அந்நாளில் இதற்கு உரிமையுடை யார் அந்தக் கால்வழியில் யார் உள்ளனர்? என்று ஆய்ந்து பெருமாக் கோதையாரைச் சென்று வேண்டினர் என்று கூறுகிறார் கவிஞர். 'வந்தமரபின் அரசளிப்பான் வனஞ்சார் தவத்தின் மருவியபின் சிந்தை மதிநூல் தேரமைச்சர் சிலநாள் ஆய்ந்து தெளிந்துநெறி முந்தை மரபில் முதல்வர்திருத் தொண்டு முயல்வார் முதற்றாக இந்துமுடியார் திருவஞ்சைக் களத்தில் அவர்பால் எய்தினார்.' 'எய்தி அவர்தம் எதிரிறைஞ்சி இருந்தண் சாரல்மலைநாட்டுச் செய்தி முறைமை யால் உரிமைச் செங்கோல் அரசு புரிவதற்கு மைதீர் நெறியின் முடிசூடி அருளும் மரபால் வந்த தெனப் பொய்தீர் வாய்மை மந்திரிகள் போற்றிப் புகன்ற பொழுதின் கண்........ என்ற பாடல்களில் மலைநாட்டுச் செய்தி முறைமை என்று கூறுவதால் ஒவ்வொரு சமுதாய மரபையும் எவ்வளவு கூர்மையுடனும் கவனத்துடனும் ஆய்ந்து தெளிந்து கூறுகிறார் என்பதை அறியலாம். வெறும் பக்தியால் தூண்டப் பெற்று இவர் காப்பியம் பாடவில்லை என்பதை நன்கு தெளியவே இந்த விரிவான பகுதி பேசப் பெற்றது. சேக்கிழார் புராணம் பாடிய ஆசிரியர் யாராக இருப்பினும் பெரியபுராணத்தின் உயிர்நாடி என்ன என்பதை அறிய எள்ளளவும் முயலவில்லை. சமணக்கதை கேட்ட மன்னன் § 9