பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

626 பெரியபுராணம் - ஒர் ஆய்வு சிவகதை கேட்க வேண்டும் என்று சேக்கிழார் பெரியபுராணம் இயற்றியதாகக் கூறிப் போய் விட்டார் அவர். பன்னிரண்டாவது திருமுறையாக இது வைக்கப் பெற்றதாலும். திருமுறைகட்கு உரை காணக் கூடாது என்ற மூடநம்பிக்கையாலும் ஆழ்ந்து கற்று இதனை ஒர் ஒப்பற்ற இலக்கியம் எனப் போற்றும் மக்கள் அருகிவிட்டனர். பக்திக்காகப் படித்தவர்கள் வீடுபேற்றை அடைவிக்கும் நூல் இது என்று கருதியும் கூறியும் வந்தார்களே தவிர, இது வாழ்க்கைக்கு வழிகாட்டும் நூல், ஒரு காலத்தில் இந்நாட்டில் வாழ்ந்த ஒரு சில செயற்கருஞ் செயல்கள் செய்த பெரியோர்களின் வரலாற்று நூல். நமது அன்றாடப் பிரச்சினைகட்குக்கூட வழிகாட்டும் நூல் என்று யாரும் சிந்திக்கவில்லை. சமயத் திருமுறை என்றதால் பிற சமயத்தார்கள் இதனைத் தொடவும் அருகதையற்றவர்கள் என்றுங் கூறிவிட்டனர். எனவே பெரியபுராணம் என்ற காப்பியம் தனக்குரிய இடத்தைப் பெறாமல் போனதற்கு முழுக் காரணமாய் அமைந்தவர்கள் இந்நாட்டுச் சைவப் பெருமக்களே ஆவார்கள். பெரியபுராணம் காட்டிய சமுதாயத்தை இதுவரைக் கண்டதில் ஒரளவு கவிஞருடைய நுண்மாண் நுழை புலத்தையும் காப்பியம் அமைக்கும் திறனையும் காண முடிந்தது. அதன் பயன் இதுமட்டுமன்று; இங்குக் கூறப்பெற்ற அடியார்கள் வாழ்க்கை எந்த அளவிற்குச் சமுதாயத்தைத் தாக்கியது என்பதையும் நாம் சிந்திக்குமாறு செய்கிறார். இதில் வரும் அடியார்களில் தொண்ணுாற்று ஒன்பது சதவிகிதத்தினர் மிகச் சாதாரணச் சூழ்நிலையில் உள்ள குடும்பத்தில் பிறந்து வாழ்ந்தவர்களேயாவர் எனவே இவர்கள் வாழ்ந்த காலத்தில் இவர்களைப்பற்றிச் சமுதாயத்தினர் பெரிய அளவில் அறிந்தோ தெரிந்தோ இருத்தல் இயலாத காரியம். அப்படியானால் இவர்கள் வாழ்க்கை எந்த அளவு சமுதாயத்தைப் பாதித்திருக்கும்? என்ற வினா நியாய மானதே யாகும். திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்திகள் ஆகிய மூவரும் இறையருளைப் பூரணமாகப் பெற்றிருந்தும் ஊர் ஊராகச் சென்றது ஏன்? எல்லா விடங்களிலும் ஒரே இறைவன்தானே நிறைந்திருக்கின்றான். அப்படி இருக்க ஊர் ஊராகச் சென்றதன் நோக்கம் யாது? பல்வேறு இடங்களிலும் வாழும் மக்களைச் சந்திக்கவே, இவர்கள் பலவிடங்கட்கும் சென்றனர். பெரும் சமயங்களைத் தோற்றுவித்த புத்தர், மஹாவீரர், இயேசு, நபிகள் நாயகம், போன்ற பெருமக்கள் ஊர் ஊராகச் சென்றதை மனத்தில் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் அனைவரும் மக்களை அழைத்து உபதேசம் செய்து தம் வழிக்கு வருமாறு அழைத்தனர். இந்த் நாட்டுச் சைவ, வைணவ