பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியபுராணம் காட்டும் சமுதாய வாழ்க்கை 6 27 அடியார்கள் அவ்வாறு செய்யவில்லை. அதற்குப் பதிலாக அந்தந்த ஊர்களிலுள்ள இறைவனைப் பாடுவதிலும் அங்குள்ள மக்கள் குறைகளைக் களைவதிலுமே தம் கவனத்தைச் செலுத் தினர். இவர்கள் எவ்வித உபதேசமும் செய்யாமையால் இவர்கள் வாழ்க்கையே மற்றவர்கட்கு எடுத்துக் காட்டாக அமைந்தது. எத்தகைய இக்கட்டான நிலையிலும் இவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள்? தாங்கள் மேற்கொண்ட கொள்கைக்கு, குறிக்கோளுக்கு எத்தனை இடையூறுகள் வந்தாலும் உயிரைக் கொடுத்தாகிலும் கொள்கையை விடாமல் காத்தவர்கள் என்பதை மக்கள் அறிவதுடன் உணரவும் தொடங்கினார்கள். வாழ்க்கையில் எந்தத் துறையில் நின்றாலும், என்ன தொழி லைச் செய்தாலும், அதிலும் ஒர் அரிய குறிக்கோளை வைத்துக் கொண்டு வாழ்ந்து பெரியவர்களாக ஆக முடியும் என்பதை இவர்கள்.வாழ்ந்து காட்டினார்கள். ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையை மேற்கொண்டால்தான் உயர்நிலையை அடைய முடியும் போலும் என்ற ஐயத்திற்கு இடமே இல்லாமல், எல்லாத் துறைகளிலும் நின்று அன்றாட வாழ்க்கையை நடத்திச் சமுதாய மரபுகட்குப் பெரும்பாலும் கட்டுப்பட்டு வாழ்ந்துகூடப் பெருநிலையை அடைய முடியும் என்பதை இவர்கள் க்ாட்டினர். அதன் அருமைப் பாட்டை உணர்ந்த சேக்கிழார் தமிழ்ச் சமுதாயம் சீர் குலையாமல் வாழ்ந்து வானுறையும் தெய்வத்துள் இடம் பெற வேண்டுமாயின், இவர்கள் வாழ்க்கை தக்க பாடமாகும் என்று கண்டு அதனைக் கூறவே இக்காப்பியத்தைப் பாடினார். அடிக்குறிப்புக்கள் திருநாவுக்கரசர் புராணம் 90 தடுத்தாட்கொண்ட புராணம் 5 தடுத்தாட்கொண்ட புராணம் 7 தடுத்தாட்கொண்ட புராணம் 8 தடுத்தாட்கொண்ட புராணம் 9, 10 தடுத்தாட்கொண்ட புராணம் 16