பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372 பெரியபுராணம்- ஓர் ஆய்வு நெடும் பாடல் வளர்ச்சி அடிப்படையாக அமைந்தது எனலாம். மதுரைக் காஞ்சியிலும் இந்த வளர்ச்சியைக் காணலாம். பின்னர்த் தோன்றிய சிலப்பதிகாரத்தில் மதுரைக் கடை வீதிகளை வருணித்து, என்ன வாணிபம் அங்கு நடைபெறுகின்றன என்பது முதலானவற்றைப் பேசும் பகுதிகளைக் காண்கிறோம். அத்தகைய வளர்ச்சி ஏற்படுவதற்கு மதுரைக் காஞ்சி, பட்டினப் பாலை என்ற நெடும்பாடல்கள் முன்னோடியாய் அமைந்தன என்று கொள்வதில் தவறு இல்லை. காப்பியங்கள் என்ற பெயருடன் இன்று தமிழ் மொழியில் இருப்பவற்றுள் மிகப் பழமையானது சிலப்பதிகாரம். இதன் காலத்தை இரண்டாம் நூற்றாண்டு என்று கணித்துள்ளனர் ஆய்வாளர் மிகத் தொன்மை வாய்ந்தது எனினும் இதனைத் தொடக்க நிலைக் காப்பியம் என்று கொள்வதற்கு இல்லை. பொதுவாகக் காப்பியங்கள் என்பவற்றின் தோற்றம் வளர்ச்சி பற்றிய சில கருத்துக்களைக் காண்பது பயனுடையதாகும். - இலக்கியத்தை வகைப்படுத்துவதில் கூடக் கருத்து வேறுபாடு கள் நிரம்ப உண்டு. தமிழ் இலக்கியத்தைப் பொறுத்தமட்டிலும் தொல்காப்பியனார் கூறும் எழுவகை யாப்புக்கள் எவை எவை என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உண்டு. யாப்பு என்று தொல்காப்பியனார் கூறுவது யாக்கப்பட்டது அல்லது செய்யப் பெற்றது என்ற பொருளில் வழங்கப்பெற்ற சொல்லையேயாம். பாட்டு யாப்பு, உரை யாப்பு, நூல் யாப்பு, வாய்மொழி யாப்பு, பிசி யாப்பு அங்கத யாப்பு, முதுசொல் யாப்பு ' என ஏழு வகைப் பிரிவுகளை ஆசிரியர் கூறுகிறார். அடுத்து உரைவகை நான்கு" என்று கூறுகிறார். பின்னர் வனப்பு என்ற தலைப்பில் அம்மை, அழகு, தொன்மை, தோல், விருந்து என்பவைபற்றிப் பேசுகிறார். உரையாசிரியர்கள் தம்முள் மாறுபட்டு இவைபற்றி உரைவகுப்பதைப் பார்க்கும் பொழுது இவற்றின் பொருளை யாராலுமே சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லையோ என்ற ஐயம் தோன்றுகிறது. காரணம் இவ்விலக்கணங்கட்கு இலக்கியமாக அமைந்த நூல்கள் தொல்காப்பியருக்குப் பிற்பட்ட காலத்தில் அழிந்துபட்டிருக்க வேண்டும். இந்த நிலையில் பின்னர்த் தோன்றிய இலக்கியக் காப்பியங்களாகிய சிலம்பு, மேகலை, சிந்தாமணி ஆகியவற்றிற் குத் தொல்காப்பியத்தில் அமைதி தேடுவதும் பொருத்தமாகப் படவில்லை. தொல்காப்பியத்தை அடுத்து ஒரு சில நூற்றாண்டு களிற் றோன்றிய சங்கப் பாடல்களே தொல்காப்பிய இலக்கண வரையறையுள் அடங்கவில்லை என்றால் 10ஆம் நூற்றாண்டு