பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22. கொள்கைப் போராட்டம் இலக்கியம் உடனடியாகவும் நாளடைவிலும் பயன் தருதல் எந்த மொழியிலும் ஒரு மாபெரும் இலக்கியம் தோன்றிற்று என்றால் அந்த மொழிக்கும் அதனைப் பேசும் மக்களுக்கும், அந்த இலக்கியம், உடனடியாகவும் நாளடைவிலும் பல பயன்களையும் தத்திருக்கும். எந்த இலக்கியம், தான் தோன்றிய சமுதாயத்துக்குப் பயன் தரவில்லையோ அது இலக்கியம் என்ற சிறப்பை இழந்து மெல்ல மெல்ல அழிந்துவிடும். அவ்வாறு அழியாமல் ஒர் இலக்கியம் அந்தச் சமுதாயத்தில் நீண்ட நெடுங்காலமாக இருந்து வருகிறது என்றாலேயே ஏதாவது உயிரான பணியை அது அந்தச் சமுதாயத்துக்குச் செய்திருக்கும் என்று கொள்வதில் எவ்விதத் தவறும் இல்லை. அந்த இலக்கியம் என்ன பணியைச் செய்தது என்பதில் கருத்து வேறுபாடு தோன்ற இடம் உண்டு. அதற்குக் காரணமும் உண்டு. ஒர் இலக்கியம் தோன்றும் சமுதாயத்துக்கு உடனடிப் பணியையும் நீண்ட காலப் பணியை யும் செய்யும் என்று கூறப் பெற்றதல்லவா? அவ்வாறு செய்வதி லும் ஒரே ஒரு பணியை அல்லது உதவியை அல்லது அறவுரையைத் தான் செய்தது என்று கூறுவதும் தவறாகும். இலக்கியம் ஒரே நேரத்தில் பல்வேறு விதமான உதவிகளைச் செய்கிறது. அந்த இலக்கியத்தில் ஈடுப்பட்டுக் கற்பவர் எத்தகைய மனநிலை உடையவரோ, எவ்வளவு பண்பாடு, கல்வி முதலியவற்றால் நிறைந்தவரோ அவ்வளவுக்கு ஏற்ற முறையில் இலக்கியம் அவர் கட்கு உதவுகிறது. எனவே குறிப்பிட்ட ஒர் உதவியைத்தான் அந்தச் சமுதாயத்துக்கு அந்த இலக்கியம் செய்தது என்று கூறுவதும் பொருத்தமாகாது. பெரியபுராணம் சமுதாயத்திற்குச் செய்த உதவிகள் யாவை? இந்த அடிப்படையை மனத்துட் கொண்டு பார்த்தால் பெரியபுராணம் இத் தமிழ்ச் சமுதாயத்திற்குப் பொதுவாகவும் சைவ சமயத்திற்குச் சிறப்பாகவும் என்ன என்ன உகவிகள் 42