பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 3.2 பெரியபுராணம் - ஒர் ஆய்வு செய்துள்ளது என்பதைக் காணமுடியும். மக்கள் குறிக்கோளுடன் வாழவேண்டும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை விலங்கு வாழ்க்கையாக மாறிவிடும். அக் குறிக்கோள் எதுவாக வேண்டுமாயினும் இருக்கலாம் என்பது சமுதாயத்துக்குப் பொதுவாகக் கூறப் பெற்ற அறவுரைகளாகும். இவற்றை அடுத்துச் சைவர்கட்கென்று சில அறிவுரைகளைத் தனியே வழங்கியுள்ளது. ஒரு வகையில் பார்க்கப் போனால் அதுவும் பொதுவானது தான் என்று கூறினாலும், சிறப்பாக அந்நாளையச் சைவத்திற்குக் கூறப் பெற்றதாகும். சைவ சமயத்தில் தோன்றிய தளர்ச்சி சைவர்கட்கு மட்டும் ஏன் கூறு வேண்டும்? என்றால் அவர் காலத்திய சைவம் இந்த அறவுரையைப் பெரிதும் நாடி நின்றது என்பதையும் காணமுடியும். 7 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பக்தி இயக்கப் புயல் 10 ஆம் நூற்றாண்டில் தளர்ச்சியடைந்து விட்டது. இதற்குக் காலம் ஒரு காரணமாயினும், இன்னுஞ் சில காரணங்களும் உண்டு. 8ஆம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தோன்றிய ஆதிசங்கர பகவத்பாதர் தோற்றுவித்த அத்வைதப் புயல் வெகு வேகமாக நாட்டை ஆட்கொள்ளத் தொடங்கிற்று. அன்பை அடிப்படையாகக் கொண்டு நாயன்மார்கள் வளர்த்த சைவம், அறிவு வாதத்தை அடிப்படையாகக் கொண்ட பெளத்தம், சைனம் என்ற இரண்டின் பிடியிலிருந்து வெளிவர நாயன்மார்களின் பக்தி இயக்கம் உதவிற்று. மேலும் பெளத்தம், சைனம் என்ற இரண்டும் கடவுட் பொருளை ஏற்காமையின் அவற்றை வெல்வது எளிதாகவும் இருந்து விட்டது. ஆனால் பிரமம் என்ற முழுமுதற் பொருளை நிறுவிவிட்டுச் சங்கரர் அத்வைத அறிவு வாதம் பேசும் பொழுது அதனைச் சாடுவது கடினமாக ஆகிவிட்டது. அன்புவழி, (பக்தி மார்க்கம்), வைதிக நெறி (விதி மார்க்கம்) என்ற இரண்டிற்கும் இடையே நிகழ்ந்த போராட்டம் மேலும், பல்லவர்கள் காலத்தில் செல்வாக்குப் பெற்று விரிவாக வளர்ந்த வேதங்கள், உபநிடதங்கள் என்பவற்றை வைத்துக் கொண்டே சங்கரர் தம் கொள்கையை நிறுவ முற்பட்டார். வேதம் முதலியவை தமிழகத்திலும் பரவிச் சைவர்கள், பக்தர்கள் என்பவர்களால் எற்றுக் கொள்ளப் பட்டிருந்த காலம் அது. வேதத்தை ஏற்காத பெளத்த, சைனர்களை வெற்றி கொள்வது நாயன்மார்கள்