பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைப் போராட்டம் 6 3 3 காலத்தில் ஒரளவு எளிதாக முடிந்து விட்டது. இப்பொழுது வேதத்தை ஏற்றுக் கொண்ட சங்கரர் தம் கொள்கையைப் பரப்பும் நேரத்தில் சைவர்கள் பாடு திண்டாட்டமாக ஆகிவிட்டது. பக்தி இயக்க காலத்தில் அன்பை அடிப்படையாகக் கொண்டு பாடின நாயன்மார்கள் போன்றவர்கள் யாரும் இப்பொழுது இல்லை. எனவே சங்கரரை எதிர்க்க வேண்டு மானால் பக்திமார்க்கத்தைப் பேசிப் பயனில்லை. அவர் கூறும் அறிவு வாதத்தைக் கொண்டே அவரை மறுக்க வேண்டிய நிலை உண்டாகி விட்டது. அறிவு வாதத்தினாலேயே சைவ சமயக் கொள்கைகளை நிறுவுவதற்கு மெய்கண்டார் போன்றவர்கள் இன்னும் தோன்றவில்லை. மேலும் தனி அத்வைதம் பேசிய சங்கரரும் சிவானந்தலஹரி, செளந்தர்யலஹரி, பஜகோவிந்தம், தட்சிணாமூர்த்தி அஷ்டகம் போன்ற பாடல்களை இயற்றியதன் மூலம் பக்தி மார்க்கத்துக்குத் தாம் பகைவரல்லர் என்றும் வெளிப் படுத்தி விட்டார். இதன் பயனாக சைவ சமயத்தில் ஒரு தளர்ச்சியும் சில கொள்கை மாறுபாடுகளும் தோன்றலாயின. ஏற்கனவே பரவி யிருந்த வேதங்களின் செல்வாக்கு இப்பொழுது மேலும் வளர்ச்சி யடைந்தது. இதன் பயனாக அன்பு வழியாகிய பக்தி மார்க்கத் துக்கும் வைதிக அடிப்படையில் தோன்றிய விதி மார்க்கத்துக்கும் ஒர் அமைதியான போட்டி உருவாகி வளரலாயிற்று. விதி மார்க்கம் கிரியைகளை அடிப்படையாகக் கொண்டது. வேதங் கள் பிராமணங்கள் மூலம் யாகம் முதலியவற்றைச் செய்ய விதி களை வகுத்தன. அந்த முறையிலேயே அன்பு வழிபாடாகிய விக்ரக வழிபாட்டிலும் அபிடேகம், அர்ச்சனை வழிபாடு என்பவற்றிற்கும் குறிப்பிட்ட மந்திரங்களைக் கூறித்தான் செய்ய வேண்டும் என்ற நிலைமை தோன்றிற்று. இந்தப் பிரச்சனை தோன்றும் பொழுது வைதிகர்கட்கும் இந்நாட்டு பக்தி முறை வழிபாட்டினர்க்கும் கருத்து வேற்றுமைகள் தோன்றலாயின. தமிழக வழிப்பாட்டில் ஆகமங்கள் பெற்ற இடம் இந்நிலையில் சிவப் பிராமணர்கள் என்பவர்கள் கோவிலில் வழிபாடு செய்யும் உரிமை பெற்றவர்களாக இருந்தனர். இவர் கள் வேதம் முதலியவற்றை அறிந்திருப்பினும், இவர்கள் ஏற்கும் விக்ரக வழிபாட்டையும், செய்யும் அபிடேகம், அருச்சனை என்பவைகளையும் வேதம் ஏற்றுக் கொள்ளாது என்பதனை நன்கு அறிந்திருந்தனர். எனவே தாங்கள் செய்யும் பூசை முதலியவற்றிற்குப் பழமையான நூல்களில் ஆதாரம் உண்டு