பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 j -4 பெரியபுராணம்- ஓர் ஆய்வு என்று காட்டவும் தாங்களும் வடமொழியிலேயே மந்திரங்கள் சொல்லி வழிபட் முடியும் என்பதைத் தெரிவிக்கவும் ஆகமங் களைத் துணையாகக் கொண்டனர். சைவ வைணவ ஆகமங்கள் ஆகமங்களைத் துணைக்கு அழைப்பதில் சைவர், வைணவர் என்ற இருவருமே ஈடுபட்டனர். ஆனால் வைணவத்தைப் பொறுத்த மட்டில் இருவகை ஆகமங்கள் தோன்றலாயின. வேதங் களின் அடிப்படையில் தோன்றிய வைகாநச ஆகமம், அதிற் சற்று மாறுபட்டு இயல்பாக வளர்ந்த பாஞ்சராத்திர ஆகமம் என இருவகையாகப் பிரிந்து இறுதியில் இவை ஒன்றுக்கொன்று பகை என நினைக்கும் அளவிற்கு வளர்ந்து விட்டன. ஆனால் சைவத்தைப் பொறுத்தமட்டில் பல ஆகமங்கள் தோன்றினாலும் அவற்றுள் வைணவம் போல் முரண்பாடு உண்டாகவில்லை. என்றாலும் தென்னாட்டுக் கோவில்களையும், விக்ரக வழி பாட்டையும் ஆதாரமாகக் கொண்ட ஆகமங்களை வைதிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. பக்தி இயக்க காலத்துக்கு முன்னர்த் தொட்டே இந்நிலை நீடித்து வந்துள்ளது. சைவ, வைணவர்கள் ஆகம அடிப்படையில் பூசைகள் செய்தாலும் வேதங்களை ஏற்றுக் கொண்டார்கள். ஆனால் வைதிகர்கள் ஆகமங்களை ஏற்றுக் கொள்ள முற்றிலும் மறுத்து விட்டார்கள். ரிக்வேதியான வைதிகந் தழுவிய குடியிற் பிறந்த ஞானசம்பந்தர் வைதிகர் என்றும், வேதம் அறிந்தவர் என்றும் தம்மைக் கூறிக் கொண்டா லும் அந்த வேதம் ஏற்காத விக்ரக வழிபாடு, அபிடேகம், அர்ச்சனை, தமிழில் பாடுதல் முதலியவற்றிக்குச் சிறப்பிடம் தந்தார் என்பதை மறுக்க முடியாது. இவற்றுடன் நில்லாமல் ஆகமங்களையும் இவர் குறிப்பிடுவதால் அதனையும் ஏற்றுக் கொண்டார் என்று கொள்வதில் தவறில்லை. வடநாட்டிலிருந்து வந்த ரிக் வேத வைதிகர்கள் ஆகமங்களை ஒருக்காலும் ஏற்றுக் கொண்டிரார். ஆகமங்கள், கோயில் அமைப்பு, விக்ரகங்கள் விளக்கம், அபிடேக முறை, வழிபாடு செய்யும் முறை என்பவற்றை அவற்றுக்குரிய மந்திரங்களுடன் விளக்கமாகக் கூறுபவையாகும். வேதம் போற்றும் இந்திரன், அக்னி முதலிய வர்களை ஆகமங்கள் மதிப்பதில்லை. எனவே ஆகமங்களைப் போற்றுபவர்கள் வாயளவில் வேதங்கட்கு மதிப்புத் தந்தனரே யன்றி வேறு ஒன்றுஞ் செய்யவில்லை. ஆனால் வேத வழிப்பட்ட வைதிகர்கள் ஆகமங்களை வாயளவிற்கூட ஏற்றுக் கொள்வ தில்லை. வேதத்திற்குப் புறம்பானது என இவற்றை ஒதுக்கி விட்டனர்.