பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைப் போராட்ட்ம் 6 3.5 இந்நாட்டுப் பூர்வ குடிகளாகிய பிராமணர்கள் ஆகமங்களை ஏற்றுக்கொண்டனர் இதன் எதிராக இந்நாட்டில் தோன்றி வளர்ந்த பிராமணர்கள் ரிக்வேதிகளாயினும் ஆகமங்களையும் சிவவழிபாட்டையும் ஏற்றுக் கொண்டனர். இக் கூட்டத்தாரின் பிரநிதிதியாகத் திருஞான சம்பந்தர் இருந்தார். ரிக்வேதி என்று தம்மைக் கூறிக் கொள்ளும் பிள்ளையார் ஆகமங்களையும் இறைவனே அருளினான் என்ற கருத்தை, 'தொகுத்தவன் அருமறை அங்கம் ஆகமம் வகுத்தவன் வளர்பொழில் கூகம் மேவினான் ' என்று திருவிற்கோலப் பதிகத்திலும் "தோகையம் பீலிகொள்வார் துவர்க்கூறைகள் போர்த்து ழல்வார் ஆகமச் செல்வனாரை அலர் தூற்றுதல் காரணமா : என்று திருவொற்றியூர்ப் பதிகத்திலும் பாடுகின்றார். வேளாளராகிய நாவரசர் ஆகமம், தந்திரம் என்ற சொற்களைக் குறைவாகவே பயன்படுத்துகின்றார். ஆனால் சிவவேதியராகிய சுந்தரர் ஆகமம் பற்றி நான்கு இடங்களிற் பேசுகிறார். காலத் தால் ஞானசம்பந்தருக்குப் பிற்பட்டவர் சுந்தரர். எனவே இவர் காலத்தே ஆகமங்கள் வழக்கில் மிகுதியும் வந்துவிட்டன என்ற வாதம் ஊற்றமுடையதாகாது. சம்பந்தரும், சமகாலத்தவராகிய அப்பரும் ஆகமம்பற்றிப் பேசுவதாலும், இறைவனே ஆகமங்களை அருளினான் என்று கூறுவதாலும், ஞானசம்பந்தர் காலத்தில் இது இல்லை என்ற வாதமும் அடிபட்டுப் போகும். சைவ சமயத் திற்குப் புத்துயிர் கொடுத்துப் பக்தி வழியை வளர்த்துவிட்ட பிள்ளையார்கூட ஆகமங்களை ஏற்றுக்கொண்டு பாடுகிறார் என்றால் இந்நாட்டு வைதிகர்கள் சிலரேனும் ஆகமத்தை ஏற்றுக் கொண்டிருந்தனர் என்றுதான் கருதவேண்டும். இந்நாட்டில் தோன்றி வளர்ந்தவர்களாக உள்ள வைதிகர் கள் கோவில், வழிபாடு, அபிடேகம், அர்ச்சனை என்பவற்றில் எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தனர் என்று கூறுவது கடினம். வைதிகர்கள் எந்த அளவுக்குப் பக்திமார்க்க வழிபாட்டை ஏற்றுக் கொண்டனர்என்றும் திட்டவட்டமாகக் கூறமுடியவில்லை. இவர் கள் வடநாட்டு வைதிகர் ஆதிக்கத்துட்பட்டுக் கோவில் வழிபாட்டை முற்றிலுமாக ஆதரிக்காமல் அரை மனத்துடன்