பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 36 பெரியபுராணம்- ஓர் ஆய்வு ஆதரித்தார்களோ? என்று கூட நினைக்கத் தோன்றுகிறது. சேக்கிழாருக்கும் இத்தகைய ஐயம் தோன்றியிருக்க வேண்டும். எனவேதான் ஒன்றிரண்டு இடங்களில் இந்த ஐயங்களை வளர்க்கும் வகையில் பாடி வைத்துள்ளார். சண்டேசர் புராணத்தில் ஆகமங்களை ஏற்காத பிராமணர்கள் சண்டேசர் புராணத்தில் நடைபெற்றனவாக அவர் கூறும் செயல்கள் நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. இப்புராணத்தில் வரும் சில தொடர்கள் அவர்கள் குறிப்பாக எதற்கு முக்கியத்துவம் தந்தனர்? என்பதைக் குறிக்கின்றன. '....திருமறையோர் முதுர் செல்வச் சேய்ஞ்ஞலூர் 'மும்மைத் தழலோம் பிய நெறியார் நான்கு வேதம் முறை பயின்றார் 'கோதில் மான்தோல் புரிமுந்நூல் குலவு மார்பிற் குழைக்குடுமி 'யாகம் நிலவும் சாலை தொறும் மறையோர் ஈந்த அவியுணவின் நாகம் அணையும் கந்தெனவும் நாட்டும் யூட ஈட்டமுள 5 'திம்பா லொழுகப் பொழுதுதொறும் ஒமதேனுச் செல்வனவும் " "தாழ்வில் தரளம் சொரி குலைப்பால் சமைத்தயாகத் தடஞ்சாலை சூழ்வைப் பிடங்கள் நெருங்கியுள தொடங்கு சடங்கு முடித்தேறும் வேள்வித் தலைவர் பெருந்தேர்கள் விண்ணோர் ஏறும் விமானங்கள் இவ்வாறு சேக்கிழார் கூறியுள்ள இயல்பும் பழக்கமும் உள்ளவர்கள் யாகஞ் செய்வதையே பெரிதாகப் போற்றினவர்கள். இந்த வைதிகர்கள் சிவவழிபாட்டில் எவ்வளவுதூரம் ஈடுபட்டனர் என்பது ஆய்வுக்குரியது. இவர்கள் மூன்று வேளையும் தீ வளர்த்தல், யாகஞ் செய்தல் என்பவற்றில் ஈடுபட்டதாகக் கூறும் கவிஞர், சிவபூசையில் ஈடுபட்டவர்கள் என்று குறிப்பைத் தரவே இல்லை. இந்த வைதிகர்கள் நான்கு வேதமும் பயின்றவர்கள்