பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைப் போராட்டம் 6.3 7 என்று கூறினாரே தவிர, ஆகமம் பயின்றவர்கள் என்று கூற வில்லை. ஆனால் இவர்களில் ஒருவனாகிய எச்சதத்தன் என்ப வனுக்கு மகனாகத் தோன்றிய விசாரசருமரைப்பற்றிக் கூறுவதை யும் கூர்ந்து நோக்க வேண்டும். விசாரசருமருக்கு ஐந்தாண்டுகள் நிறைந்தவுடன் பிறர் சொல்லித் தராமலே இவருக்குச் சில தெரிந்தன என்று கூறவரும் கவிஞர், * 'ஐந்து வருடம் அவர்க்கணைய அங்கம் ஆறும் உடன் நிறைந்த சந்தமறைகள் உட்படமுன் தலைவர் மொழிந்த ஆகமங்கள் முந்தை அறிவின் தொடர்ச்சியினால் முகைக்கு மலரில் வாசம் போல் சிந்தை மலர உடன் மலரும் செவ்வி உணர்வு சிறந்ததால் என்று கூறுகிறார். அந்த ஊரில் உள்ள எந்த மறையவருக்கும் தெரியாத ஆகமங்கள் இவர் உள்ளத்தில் மலர்ந்தன என்று கூறுவதைக் கூர்ந்து நோக்கல் வேண்டும். ஊரில் உள்ள அந்தணர், அவர்கள் கல்வித்திறம், வேள்வி செய்யும் இயல்பு என்பவற்றைப் பற்றி 10 பாடல்கள் பாடிய கவிஞர் ஒர் இடத்திற் கூட ஆகமம் பற்றிப் பேசவே இல்லை. ஆனால் விசார சருமரைக் குறிக்கும் முதற்பாடலிலேயே தலைவர் (சிவபிரான்) மொழிந்த ஆகமங்களைப் போதிப்பார் இன்றியே இக் குழந்தை அறிந்தான் என்று கூறுதல் சிந்திக்கத்தக்கது. பின்னர் இவருக்கு உபநயனம் செய்வித்து மறை ஒதுவித்தார் களாம். ஆனால், 'குலவும் மறையும் பலகலையும் கொளுத்து வதன்முன் கொண்டமைந்த நிலவும் உணர்வின் திறங்கண்டு நிறுவும் மறையோர் அதிசயித்தார் அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங்கழலே எனக் கொண்ட செலவு மிகுந்த சிந்தையினில் தெளிந்தார் சிறிய பெருந்தகையார். " இந்தப் பாடலின் மூலம் நடைபெற்றதைக் குறிப்பாக விளக்கு கிறார் கவிஞர். முதலிற் காட்டிய பாடலின் படி ஆறு அங்கங் களுடன் கூடியனவும்,சந்தத்துடன் பாடப் படுவனவுமான மறை