பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 3 & பெரியபுராணம் - ஒர் ஆய்வு கள் அவருக்கு முற்பிறவித் தொடர்ச்சியினால் தாமே வந்து விட்டன என்று கூறுவதோடமையாமல், ஆகமங்களும் அவரால் உணரப்பட்டன என்கிறார் ஆசிரியர். ஆகமங்களைப்பற்றிக் குறிப்பிடும் இடத்தில் உள்ள தலைவர் மொழிந்த என்ற அடை மொழி கூர்ந்து கவனிக்க வேண்டியதாகும். ஊரிலுள்ள மறைவல்ல பெரியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் பொழுது சொல்லப்படாத ஆகமங்களை, இந்தப் பாலகன் பற்றிப்பேசும் பொழுது குறிப்பிடு வதே புதுமை. அதைவிடப் புதுமை தலைவர் மொழிந்த ஆகமங்கள் என்று அடை கொடுத்துக் கூறுவதாகும். வேதம் தலைவர் மொழிந்தவை என்று கூறுவோர் எதிரே, ஆகமங்களும் தலைவர் மொழிந்தவைதாம் என மெள்ளச் சேக்கிழார் ஒரு கருத்தைப் புகுத்துகிறார். இவர் இவ்வாறு கூற அன்றைய நம்பிக்கைதான் காரணமா? என்றால் இல்லை என்று கூறிவிட லாம். இவர் எந்த சுந்தரமூர்த்திகளை வழிபடுகின்றாரோ அந்தச் சிவவேதியரான சுந்தரரே தம்முடைய பதிகத்தில், 'அண்டர் தமக்கு ஆகம நூல்மொழியும் ஆதியை ' என்று கூறுகிறார். இவரையல்லால் நாவரசரும், 'ஆகமம் சொல்லும் தன் பாங்கிக்கே ' என்றும் கூறுகிறார். ஆகலின் சேக்கிழார் தக்க ஆதாரத்துடன் தான், தலைவர் மொழிந்த ஆகமங்கள் என்று கூறுகிறார். மேலும் விசாரசருமர் அவற்றைக் கற்றார் என்று கூறாமல் ஒதாமலேயே உணர்ந்தார் என்றும் கூறுகிறார். இனி அடுத்துள்ள பாடலில் விசாரசருமருக்கு மறை ஒதுவித்த ஆசான்கள், சொல்லித் தருவதற்கு முன்னரே அறிந்து கொள்ளும் இப் பிள்ளையின் ஆற்றலைக் கண்டு அதிசயித்தார்கள் என்று கூறி அத்துடன் அவர்களைப்பற்றிய செய்தியை விட்டுவிடுகிறார். இவர் கற்றுக் கொள்ளும் ஆற்றலைக் கண்டு அந்தணர்கள் அதிசயித்தார்களே தவிர, இப்பிள்ளையின் உள்ளத்தில் பிறந்து விட்ட தெளிவை அவர்கள் அறியவில்லை; அறியவும் முடியாது. அலகில் கலையின் பொருட்கெல்லை ஆடுங்கழலே என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். யாகச் சடங்குகளைச் செய்யும் கார்மிகள் அவர்கள் என்பதைக் குறிப்பாக விளக்கு கிறார். இவ்வாறு கூற ஒரு சிறப்பான காரணம் உண்டு. மாடுகளைக் கொண்டு சென்று மேய்ப்பதாக விசாரசருமர் கூறியவுடன் அனைவரும் ஒப்புக் கொண்டனர். மேய்கின்ற