பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைப் போராட்டம் 6 39 மாடுகள் தாமே பொழியும் பாலை, அப்பிள்ளை, சிவலிங்கம் அமைத்து, அப் பெருமானுக்கு அபிடேகஞ் செய்து வந்தார். இவர் பாலைக் கறந்து இதனைச் செய்யவில்லை. பசுக்கள் தாமாகப் பொழிந்த பாலையே அபிடேகஞ் செய்து வந்தார். இதனைக் கவனித்த யாரோ சென்று ஊரிலுள்ள வேதியர் களிடம் கூறிவிட்டனர். அவ்வாறு இதனைத் திருட்டுத்தன மாகக் கவனித்து ஊருக்குள் சென்று கூறியவர்கள் விசாரசருமர் சிவலிங்கத்தை மணலால் செய்து அப்பெருமானுக்குப் பாலை அபிடேகஞ் செய்வதாகத்தானே கூறியிருப்பர்? இந்தச் செய்தி காதில் விழுகின்றவரை இந்த வேதியர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தனர் என்று கவிஞர் பாடுகிறார். ஏன்? எவ்விதக் கூலியும் வாங்காமல் இந்தப் பிரம்மச்சாரி தாமே மேய்ச்சல் தொழிலை விரும்பி ஏற்றுக் கொண்டதிலிருந்து முன்னையினும் அதிகமாகப் பாலைக் கொடுத்தன என்பதால் பெற்ற மகிழ்ச்சியாம் அது. இந்தப் பாலை அந்த வேதியர்கள் என்ன செய்தார்கள் என்பதையும் கவிஞர் கூறிவிடுகின்றார். 'ஆய நிரையின் குலமெல்லாம் அழகின் விளங்கி மிகப்பல்கி மேய இனிய புல்லுணவும் விரும்பு புனலும் ஆர்தலினால் ஏய மனங்கொள் பெருமகிழ்ச்சி எய்தி இரவும் நண்பகலும் தூய தீம்பால் மடிபெருகிச் சொரிய முலைகள் சுரந்தனவால்'. 'பூனுந் தொழில் வேள்விச் சடங்கு புரிய ஒம தேனுக்கள் காணும் பொலிவின் முன்னையினும் அநேகமடங்கு கறப்பனவாய்ப் பேணும் தகுதி அன்பால்இப் பிரமசாரி மேய்த்ததற்பின் மானும் திறத்த ஆன என மறையோர் எல்லாம் மன மகிழ்ந்தார். ' என்ற முறையில் தாம் செய்யும் வேள்விகட்கு மிகுதியான பால் கிடைக்கின்றது என்று மகிழ்ந்திருந்த வேதியர்கள் பிரம்மச்சாரி சிவபூசை செய்து அபிடேகத்திற்குப் பாலைப் பயன்படுத்துகிறார் என்ற செய்தி அறிந்தவுடன் மனம் மாறி விடுகின்றனர். பிரம்மச் சாரியின் தந்தையாகிய எச்சதத்தனை அழைத்து அந்த மறையவர்.