பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்க் காப்பியங்களின் தோற்றமும் வளர்ச்சியும் 37 3 வாக்கில் தோன்றிய சிந்தாமணியைத் தொல்காப்பிய இலக்கணத் துள் அடக்க முற்படும் நச்சினார்க்கினியரை எவ்வாறு ஏற்றுக் கொள்வது? சிலம்புக்கு உரையிட்ட அடியார்க்கு நல்லாரும், சிந்தாமணி உரையாசிரியராகிய நச்சினார்க்கினியரும் தொல் காப்பியந் தவிர ஏனையவை நிரம்பிய இலக்கணத்தன அல்ல ஆகலின் தொல்காப்பியமே இவற்றிற்கு இலக்கணமாக அமைய வேண்டும்' என்று கூறினர். நச்சினார்க்கினியர் பத்துப்பாட்டு உரையிலும் இதனைச் செய்கின்றார். போரில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிக்கும் நெடுஞ்செழியனை வாழ்க்கையை அனுபவித்து முழு வாழ்க்கை வாழ வேண்டும் என்று கூறும் மதுரைக் காஞ்சி, தொல்காப்பியனாரின் காஞ்சித் திணைக்கு ஒத்துவரவில்லை என்பதற்காக அப்பாட்லை நச்சினார்க்கினியர் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்துப் பொருள் கூற முற்படுவதும் இந்த மன நிலையினாலேயேயாகும். இவ்வுரை யாசிரியர்கள் வளர்ச்சியையும் மாறுபாட்யுைம் ஏற்க மறுத்து விடுகின்றனர். காப்பியங்கள் பற்றித் திறனாய்வாளர் கூறுவன காப்பியம் என்ற சொல் காவ்யம் என்ற வட சொல்லின் திரிபு என்பாரும் காப்பு-இயம் எனப் பிரிபடும் தனித்தமிழ்ச் சொல் என்பாரும் நேற்றுவரை நிறைந்திருந்தனர். ஆனால் காவ்யம் என்ற வட சொல்லாகட்டும், காப்பியம் என்ற தமிழ்ச் சொல்லாகட்டும் இலக்கியத்தின் எந்த ஒரு தொகுதியைக் குறிக் கின்றதோ அந்தத் தொகுதியை அந்நாளில் அச்சொல் குறிக்க வில்லை என்பது தெளிவு. இன்று காப்பியம் என்று நம்மால் குறிக்கப்படும் இலக்கிய இனத்தைத் தொல்காப்பியனார் அறிவாரா என்பது பற்றியும் இன்று தெரிய வாய்ப்பில்லை. வனப்புகளுள் 'தொன்மை' என்ற ஒன்றைக் கூறும் அவர் பழமை பற்றிக் கூறும் இலக்கியம் என்ற கருத்தைத் தெரிவிக்கின்றார். இதன் எதிராக விருந்து என்ற வகை இலக்கியத்தையும் குறிக் கிறார். எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் தொல்காப்பியனார் காலத்திலும், அவர் காலத்துக்கு முன்னும் பழமைபற்றிப் பேசும் இலக்கியமும், புதுவதாகப் புனையும் இலக்கியமும் இடம் பெற் றிருந்தன என்று கொள்வதில் தவறு இல்லை. "நிலன்நாவில் திரிதரூஉம் நீண்மாடக் கூடலார் புலனாவில் பிறந்த சொல்புதிது உண்ணும்பொழுதன்றோ பல நாடு நெஞ்சினேம் பரிந்து நாம் விடுத்தக் கால் கடரிழாய் நமிக்கவர் வருதும் என்று உரைத்ததை "' என்ற பாடலில் கார்காலத்தைக் குறிப்பதற்குத் தோழி 'உலகில் உள்ளவர் அனைவராலும் புகழப்படும் கூடல் பதியில் உள்ளவர்