பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 0 பெரியபுராணம் - ஓர் ஆய்வு 'அந்தண் மறையோர் ஆகுதிக்குக் கறக்கும் பசுக்களான வெல்லாம் சிந்தை மகிழ்ந்து பரிவினால் திரளக் கொடுபோய் மேய்ப்பான்போல் கந்தம் மலிபூம் புனல்மண்ணி மணலில் கறந்து பாலுகுத்து வந்த பரிசே செய்கின்றான் என்றான் என்று வாய்மொழிந்தார். ' வேள்விச் சடங்கிற்குப் பயன்படும் பால் இப்பொழுது மணலில் ஊற்றப்படுகிறது என்கின்றனர் இந்த வேதியர்கள். வந்து கூறியவன் 'பிரம்மச்சாரி மணலில் இலிங்கம் அமைத்து அதற்கு அபிடேகம் செய்கிறான்' என்று தானே, தான் கண்டதைக் கூறியிருப்பான். அப்படி இருந்தும் இந்த வேதியர்கள் அவன் இலிங்கத்திற்குப் பாலை அபிடேகஞ் செய்கிறான் என்று நடக்கின்ற உண்மையை அப்படியே கூறாமல் 'மணலிற் கறந்து பாலுகுத்து விடுகிறான் என்று கூறுவது, நடப்பதை அறிந்திருந்தும் மய்மையை (Facts) மறைத்துப் பொய் பேசுவதாகும். இதனைக் கூறவந்த கவிஞர் வாய் மொழிந்தார்' என்று கூறுகிறார். 'வாய்மொழிதல்' என்றால் சத்தியத்தைப் பேசுதல் என்ற பொருள் படும். ஆனால் இங்கு வாயில் வந்ததைப் பேசினார்கள் என்ற பொருளில் கவிஞர் இரு பொருள் தரும் இத் தொடரைப் பயன் படுத்துக்கின்றார். இதனைக் கேட்ட எச்சதத்தன் நடப்பதைத் தானே சென்று காணவேண்டும் என்று கருதியவனாய் மகனார் சென்ற பிறகு அவர் அறியாமல் அவர் பின்னே சென்று மரத்தின் மேல் ஒளிந்திருந்து நடப்பதைக் கவனிக்கின்றான். சிறிய பெருந்தகை யாராகிய விசாரசருமர் சிவபூசையைத் தொடங்கித் தம்மை மறந்தவராய்ப் பால் குடங்களை ஒவ்வொன்றாக எடுத்து அபிடேகஞ் செய்யத் தொடங்கினார். அது கண்டு, பெரும் சினங்கொண்ட எச்சதத்தன் என்ன செய்தான் என்பதைக் கவிஞர், 'மேலாம் பெரியோர் பலகாலும் வெகுண்டோன் அடிக்க வேறுனரார் பாலார் திருமஞ்சனம் ஆட்டும் பணியிற் சலியா ததுகண்டு மாலா மறையோன் மிகச்செயிர்த்து வைத்த திருமஞ் சனக்குடப்பால்