பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைப் போராட்டம் 64 1 காலால் இடறிச் சிந்தினான் கையாற் கடமைத் தலைநின்றான்' " என்று கூறுகிறார். சிவபூசையில் உள்ளம் ஈடுபட்ட, பெரியாருக்கு இவன் முதுகில் அடித்தது தெரியவில்லை. ஆனால் அபிடேகத் துக்கு வைத்திருந்த பாலைக் காலால் உதைத்தவுடன் தம்முணர்வு பெற்றவராய், இதனைச் செய்தவன் தன் தந்தை என்பதை அறிந்தும், கீழே கிடந்த கோலை எடுக்க, அது மழுவாக மாறிவிட அது கொண்டு தந்தையின் கால்களை வெட்டிவிட்டார். இந்த வரலாறு முழுவதிலும் ஒர் உண்மையைக் காட்டிச் செல்கிறார் கவிஞர். வேத வழி நின்று யாகம் முதலிய சடங்கு களையே பெரிதென மதித்து வேள்வி செய்யும் வேதியர்கள் 'சிவபூசை முதலியவற்றை ஏற்க மறுத்துத் தம் கொள்கையிலேயே நின்றனர். இவர்களின் எதிராகக் கவுண்டின்ய கோத்திரத்தார் போன்றவர்கள் வேதத்தொடு சிவபூசையையும் ஏற்றிருந்தனர். வேதத்தை ஏற்றுக் கொண்ட வைதிகர்களுள் இந்த இரண்டு வகைப் பிரிவு இருந்ததைச் சேக்கிழார் குறிப்பாகக் காட்டிச் செல் கிறார். வைதிகச் சடங்குகட்குத் தலைமையிடம் அளித்து அவை தவிர வேறு எதுவும் தேவை இல்லை என்று கருதிய கூட்டத்தார் சேய்ஞ்ஞலூரில் வாழ்ந்த மறையவர்கள். அவர்களுள் ஒருவனான எச்சதத்தன் யாகம் முதலிய சடங்குகளில் பால் சொரியப் படுவதை ஏற்றுக் கொள்வானே தவிர, சிவலிங்கத்துக்குப் பால் அபிடேகஞ் செய்யப்படுதலை ஏற்றுக்கொள்ள மறுப்பவனாவான். வைதிகருள்ளும் மூவகையினர் கோயில் வழிபாடு, சிவபூசை, அபிடேகம், அர்ச்சனை என்பவற்றை ஏற்றுக்கொள்ளும் மறையவனாக அவன் இருந் திருப்பின் அபிடேகத்துக்குரிய பாலைக் காலால் உதைத்து உருட்டி விட்டிருக்க மாட்டான். அவனைப் பொறுத்த மட்டில் யாகத்தில் பால் சொரிதல் ஒன்றுதான் அனுமதிக்கப்பட்டதாகும். அதனை யல்லாத அபிடேகம் முதலியவை பாலை வீணடிக்கும் விளையாட்டுக்களாகும். இந்த மறையவர்கள் எவரும் ஆக மங்களை ஏற்றுக்கொள்வதில்லை. இந்த நிலையில் சமயத்தை ஏற்றுக் கொள்பவர்களை மூன்று பிரிவினராகப் பிரிக்கலாம் என் தோன்றுகிறது. - 1. வேதம் அனுமதித்த வேள்வி போன்ற வைதிகச் சடங்கு கள் தவிர வேறு எதனையும் ஏற்றுக் கொள்ளாத அப்