பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 4.2 பெரியபுராணம் - ஒர் ஆய்வு பட்டமான வேதவாதிகள் ஐந்தெழுத்துக்கும் தலைமையிடம் தருவதில்லை. 2. வேதம் அனுமதித்த வேள்வி முதலியவற்றுடன் சிவபூசை அபிடேகம்,அர்ச்சன்ன, தமிழில் பாடுதல் ஐந்தெழுத்து என்பவற்றையும் ஏற்பவர்கள். 'வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவது நாதன் நாமம் நமச்சிவாயவே 1 & என்று கருதுபவர்கள், மேலும் இவர்கள் சைவ ஆகமங்களையும் ஏற்றுக் கொள்பவர்கள். 3. இவர்கள் இரண்டாவது தொகுதியினருடன் சேர்பவர் களாக இருப்பினும் வேதம் முதலியவற்றிற்கு முக்கியத் துவம் தராத பாசுபதர், மாவிரதிகள், காளாமுகர் போன்றோர் ஆவர். வேதம் முதலியவற்றிற்கும், வேள்விகட்கும் மதிப்புத் தாராமையின் இக் கூட்டத்தார் தனித்தே இருந்தனர். - இந்த மூன்று பிரிவினரை அல்லாத சிவவேதியர்கள் என்ற கூட்டத்தாரும் இங்கிருந்தனர். இவர்களும் வேதத்தை ஒரளவு ஏற்றுக் கொண்டாலும் ஆகமங்கட்குத் தலைமை இடம் தருபவர் கள். திருக்கோயில் வழிபாடு பெரும்பாலும் இவர்கள் கையில் தான் இருந்து வந்தது. சேய்ஞ்ஞலூரில் வாழ்ந்த வேதியர்கள் முதல் தொகுதியைச் சேர்ந்தவர்கள். திருஞானசம்பந்தர், திருநீலநக்கர் போன்றோர் இரண்டாம் தொகுதியைச் சேர்ந்தவர்கள். விசாரசருமர் போன்றோரும் இத் தொகுதியைச் சேர்ந்தவர்களே ஆவர். சுந்தரமூர்த்தி நாயனார் போன்றவர்கள் நான்காவது தொகுதியினைச் சேர்ந்தவர்கள். இரண்டு, மூன்று, நான்காவது தொகுதியினர் வெவ்வேறுபட்ட கருத்துடையவரா யினும் கோயில் வழிபாடு, அபிடேகம், அருச்சனை ஐந்தெழுத்து என்பவற்றை ஏற்றுக் கொள்ளும் பொது இயல்பில் ஒன்றாக இருந் தவாகள. இந்த கொள்கைப் போராட்டம் சண்டேசர் புராணத்தில் பேசப்படுகிறது முதல் தொகுதியினராகிய இவர்கள் யாருடனுஞ் சேராமல் இருந்தனர். சிவபூசை முதலியவற்றை அவர்கள் சட்டை செய்வ