பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைப் போராட்டம் 6 4 3 தில்லை. எனவே இவர்களுடன் ஏனைய இரண்டு முதல் நான்கு வரையுள்ள கூட்டத்தார் ஓயாத மெளனப் பேராட்டம் நடத்தினர் என்பது சமயவரலாறு அறிந்தவர் அனைவரும் ஏற்கும் உண்மையாகும். இந்த நான்கு பிரிவினரும் பெளத்தர், சமணர் என்பவர்களை எதிர்த்துப் போராடும் அளவிற்கு ஒன்றாக இருந்தனர் என்பது உண்மை. ஆனால் இந்தப்போரை வெளிப்படையாக நடத்திய இவர்கள் தம்முள் ஏற்பட்ட போராட்டத்தை மறைமுகமாக நடத்திக் கொண்டிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது. ஞானசம்பந்தர் ஐந்தெழுத் தென்பது நான்கு வேதங்களிலும் மேம்பட்டது என்றும், மாலையில் செபிக்க வேண்டிய மந்திரம் ஐந்தெழுத்தே என்றும் வலியுறுத்திக் கூறவது இவர்களைத் தம் வழிக்குக் கொண்டு வரவேயோகும். இவ்வாறு ஐந்தெழுத்தின் பெருமை கூறும் பிள்ளையார் ஓயாமல் வேதங்கள், ஆறு அங்கங்கள் என்பவற்றையும் உடன் கூறுவது இந்த இரண்டு கூட்டத்தாரிடையே ஒரு ஒருமைப்பாட்டை (Synthesis) ஏற்படுத்தவேயாம். இனி இரண்டாவது தொகுப்பைச் சேர்ந்த வேதியர்களும் சிவபிரானை ஏற்றுக் கொண்டார்கள். அபிடேகம், அர்ச்சனை, ஐந்தெழுத்து என்பதை ஏற்றுக் கொண்டார்கள் என்பது உண்மை தான். ஆனால் வேள்வி செய்வதில் இவர்கட்கிருந்த நம்பிக்கை வலுவானது என்பதை ஞானசம்பந்தரின் பெற்ற தந்தையாகிய சிவபாத இருதயர் மூலம் அறிய முடிகிறது. என்றாலும் கெளண்டிண்ய கோத்திரத்தாரராய இவர்கள் வேதம் உடன்படாச் சிவவேள்வி செய்தனர் என்பதையும் சேக்கிழார் அறிவிக்கின்றார். வைதிகர்களுள் இந்தக் கவுண்டிண்ய கோத்திரத்தார் அல்லாத மற்றையோர் கோயில் வழிபாடு, அபிடேகம் முதலியவற்றை ஏற்பதில்லை. வேறு எந்த மறையவர்பற்றிக் கூறும்போதும் அவர்கள் கோத்திரத்தைக் கூறாமல் சேய்ஞ்ஞலூர் வைதிகர் களைக் குறிப்பிடும் பொழுது மட்டும் அவர்கள் காசிப கோத்திரத்தார் என்பதைச் சேக்கிழார் குறிப்பாக எடுத்துக் கூறுகிறார். х வைதிகர்கள் இடையே இருந்த கொள்கைப் போராட்டத்தை அறிவிக்கவே சண்டேசுரர் புராணத்தைப் பயன்படுத்துகிறார் சேக்கிழார் என்று கண்டோம். இவ்வாறு இல்லையானால் சண்டேசர் புராணத்தில் முதல் எட்டுப் பாடல்களை இந்த வைதிக வேதியர் வாழ்க்கை முறையை விரிவாகப்பாடுவதற்குப்