பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைப் போராட்டம் 6 4.5 } திருநீலநக்கர் விதிமார்க்கத்தின்படி வழிபடுபவர், அவர் மனைவியார் தாயன்பு நிறைந்தவர், இறைவன் மேல் சிலந்திப் பூச்சி விழுந்துவிட்டது என்றால் உடனே தாயன்பு அச் சிலந்தியை ஊதி அப்புறப்படுத்திற்று. இறைவ்ன் திருமேனி ஆகம முறையில் தொட்டு வழிபடுவதற்குரியதே தவிர வாயில் உள்ள எச்சில் அத்திருமேனி மேல் படக்கூடாது. அது அனுசிதம் என்று நினைப்பவர் நீலநக்கர். எனவே தம் மனைவி சிலந்திப் பூச்சியை வாய்ால் ஊதி அப்புறப் படுத்தியதிலுள்ள அன்பின் நிறைவைக் காணத் தவறிவிடுகிறார். இறைவன் இந்நிலையில் கனவிடை வந்து தன் திருமேனியை அவருக்குக் காட்டி 'உள்ளம் வைத்து எமை ஊதிமுன் துமிந்தபால் ஒழியக் கொள்ளும் இப்புறம் சிலம்பியின் கொப்புள்' ' என்று கூறினான். இறைவனே வந்து அன்பால் வழிபடுபவர்கள் விதி வழியில் வழிபடுபவர்களைவிடத் தன்னால் விரும்பப்படுகிற வர்கள் என்பதைக் குறிப்பால் கூறினான் என்கிறார் கவிஞர். இந்த இருவழியினர் போராட்டத்தை மிக விரிவாக எடுத்துக் காட்டவும் இறைவன் எதனை அதிகம் ஏற்றுக் கொள்கிறான் என்பதனை விளக்கவும், அன்புவழி எவ்வாறு விதிவழியைவிட உயர்ந்தது என்பதை விளக்கவும் சேக்கிழார் கண்ணப்பர் வரலாற்றை எடுத்துக் கொள்கின்றார். இவர் வரலாறு பற்றி முன்ன்ரே விரிவாகப் பேசப் பெற்றது. கண்ணப்பர் பெற்ற இத்தகையை முழுமாற்றத்தை (Complete Transformation) எவ்வாறு விளக்குவது? இவரிடம் தற்போதம் இல்லை; அதனால் வினை இரண்டும் இல்லை; மலம் மூன்றும் இல்லை. என்றால் இந்த ஆறையும் இழந்து விட்ட பிறகு திண்ணன் என்ற பெயரைத் தாங்கிய உடல் மட்டுமே இருந்ததா? ஆம்! அது உண்மைதான்! அப்படியானால் இல்லை, இல்லை, என்று எதிர்மறையால் கூறி விட்டால் அங்கே ஒன்றும் இல்லாமல் சூன்யம் இருந்தது என்று பெளத்தர்கள் போல் கூறுவதா? அற்புதமாக விடை தருகிறார் சேக்கிழார். 'முன்புதிருக் காளத்தி முதல்வனார் அருள்நோக்கால் - இன்புறுவே தகத்து இரும்பு பொன்ஆனாற் போல் யாக்கை தன்பரிசும், வினை இரண்டும், சாரும் மலம் மூன்றும் அற அன்புபிழம்பாய்த் திரிவார் அவர் கருத்தின் அளவினரோ' என்ற பாடலில் தன்பரிசு, வினை இரண்டு, மலம் மூன்று ஆகிய ஆறும் அழிய அந்த யாக்கை முழுவதும் அன்பே வடிவமாக ஆகி 18