பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 4.6 பெரியபுராணம்- ஓர் ஆய்வு விட்டது! இதனை எவ்வாறு என்று யார் கூற முடியும் இது முடியுமா? என்றால் அதற்கு விடையாக முதல் இரண்டடிகளில் கவிஞர் விடை கூறுகிறார். தேவரின் அருள் நோக்கம் பட்டதால் பொன்னனையான் வைத்திருந்த இரும்பெல்லாம் பொன் ஆனாற் போல இவர்அன்புப் பிழம்பாக ஆகி விட்டார் என்று கூறுகிறார். விதிவழிப் பூசை அன்புவழிப் பூசை இரண்டின் முரண்பாடுகள் விளக்கம் தமிழகச் சைவ சமய வரலாற்றில் காணப்படும் மிக உயர்ந்த ஒரு குறிக்கோளை இப்புராணத்தில் அமைத்துக் காட்டுகிறார் கவிஞர். ஒரு மனிதன் இந்த இப் பிறவியிலேயே இதற்கு மேலான பதவி ஒன்றும் இல்லை என்று சொல்லக்கூடிய நிலையை அடைய முடியும்; அதற்குக் கல்வி முதலிய எத்தகைய அடிப்படைத் தேவை யும் வேண்டியதில்லை. ஒரேயடியாக ஒருவன் தன்னை இறைவனிடம் ஒப்படைத்து விடுவானேயானால் இத்தகைய ஒரு நிலையையும் அடைய முடியும் என்ற மிகப் பெரிய தத்துவத் தைச் சேக்கிழார் இங்குப் படைத்துக் காட்டுகிறார். பழைய திருமுருகாற்றுப்படைக்காரர், 'ஒரு நீயாகத் தோன்ற விழுமிய பெறவரும் பரிசில் நல்கும் " என்று கூறியதன் விளக்கமாகக் கவிஞர் இவ் வரலாற்றைப் படைக்கின்றார். இத்துணை விரிவாகக் கண்ணப்பர் வரலாற்றைச் சேக்கிழார் பாடக் காரணம் யாது? இதன் முற்பகுதியில் கூறியதுபோல அன்புவழி வழிபாடு தளர்ச்சியுற்று அத்வைதம் புயல் போலத் தமிழ் நாட்டில் புகுந்துள்ள ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை அத்வைத மார்க்கத்தை எதிர்த்துப்போரிடும் தகுதியுடையார் எவரும் தமிழகத்தில் தோன்றவில்லை. எனவே மூவர் முதலிகளும் மணிவாசகரும் கூறிச் சென்ற அன்புவழி வழிபாட்டை மறுபடியும் தமிழகத்தில் கால் கொள்ளச் செய்ய வேண்டும் என்று கருதுகிறார் சேக்கிழார். வேதம், வேள்வி என்பவற்றை எதிர்த்துப் போராடினால் பயன்விளையப் போவதில்லை. மூவர் காலத்திலேயே இந்த எதிர்ப்பு முறையைக் கைவிட்டு ஒருவகை யான ஒருங்கிணைப்பு முறையை (Synthesis) ஞானசம்பந்தர் நிலைநாட்ட முற்பட்டார். அவர் காட்டிய வழியைப் பின்பற்றும் சேக்கிழார் இவை இரண்டையும் சண்டேசர், கண்ணப்பர்,