பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/307

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொள்கைப் போராட்டம் 6 47 திருநீலநக்கர் முதலியோர் புராணங்களில் ஒன்றாக வைத்துக் காட்டுகையிலேயே அன்புவழி வழிபாட்டின் பெருமையை இனிமையை, விரைவில் பயனடையும் எளிமையை வைத்துக் காட்டிச் செல்கிறார். இந்தப் பல்வேறு மார்க்கங்களும் தமிழகத்தில் புகுந்து இங்குள்ள அன்புவழிபாட்டுடன் முரணிக் கால்கொள்ள முயன்ற வரலாறே ஏழாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை நிகழ்ந்த சமயப் போராட்ட வரலாறாகும். இந்தப் போர் முனையில் தமிழர்தம் அன்புவழியே சிறந்தது. தமிழ் மூலமே இறைவழிபாடு செய்யலாம் என்ற படைக்குத் தலைமை ஏற்று, தூசிப்படையாகச் சென்றவர் 7 ஆம் நூற்றாண்டில் தோன்றிய பிள்ளையார். 12ஆம் நூற்றாண்டில் இறுதியாக இப்போரை நடத்திக் காட்டியவர் சேக்கிழார். இனி 14ஆம் நூற்றாண்டில் அறிவு வாதம் பேசும் சிவஞானபோதம் முதலியவை தோன்றலாயின. - கொள்கைப்போராட்டம் என்ற முறையில் பார்த்தால் சேக்கிழார் காலத்தில் நடைமுறையில் இருந்து வந்த பல பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும், அவர் மென்மையாகச் சாடுதலைக் காண முடியும். ஞானசம்பந்தர், நாவரசர் காலத்தில் வைதிக-அன்பு நெறி வழிபாட்டு முறைகளுள் இருந்த போராட்டம் பற்றி விரிவாகப் பேசப்பெற்றது. இந்த அடிப்படையிலேயே சாதி வேறு பாடுகள் பரவலாகப் பாதுகாக்கப் பெற்று வந்தன என்றும், சேக்கிழார் காலத்திலும் இது நடைமுறையில் இருந்து தான் வந்தது என்றும் கூறப்பெற்றது. சாத்திரவழி நடப்பவர்களும், சாதாரண மக்களும், எந்த ஒரு செயலைச் செய்ய வேண்டுமாயினும் நாள் கோள் முதலிய வற்றைப் பார்த்தே அச் செயலைத் தொடங்குதல் மனித சமுதாயம் முழுவதிலும் உள்ள பழக்கமாகும். நம்பிக்கையின் அடிப்படையில் இது நடைபெறுகிறது. மிகவும் முன்னேறிவிட்ட தாகக் கூறிக் கொள்ளும் மக்களிடையேயும் இந் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த பழக்கவழக்கங்களை இன்றும் காணலாம். நெஞ்சில் உரமும், இறைவனிடத்தில் நீங்காத அன்பும் உடையார் இந்த நம்பிக்கைகளைத் தகர்த்து எறிந்த நிகழ்ச்சிகளும் பெரிய புராணத்தில் இடம் பெறுகின்றன. திருஞானசம்பந்தரும் திருநாவுக்கரசரும் திருமறைக் காட்டில் தங்கி இருக்கும் நேரத்தில் மதுரையிலிருந்து மங்கையர்க்கரசியார் அனுப்பிய தூதுவர்கள் வந்து பிள்ளையாரை அழைக்கின்றார்கள். 43