பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 8 . பெரியபுராணம் - ஓர் ஆய்வு மதுரை, சமணர் பிடியில் சிக்கி அவதியுறுவதாக அவர்கள் கூறி அதனை மாற்ற அவரை வருமாறு வேண்டுகின்றனர். திருநாவுக் கரசரிடம் கூறிவிட்டு மதுரை செல்லத் துணிந்தார் பிள்ளையார். இதனைக் கேட்டவுடன் நாவரசர் நடுநடுங்கிவிட்டார், இதோ அவர் பேசுகிறார். அரசருளிச் செய்கின்றார் 'பிள்ளாய்! அந்த அமண்கையர் வஞ்சனைக்கோர் அவதியில்லை; உரைசெய்வதுளது உறுகோள்தானுந்தீய; எழுந்தருள உடன்படுவது ஒண்ணாது என்னப் பரசுவது நம்பெருமான் கழல்கள் என்றால் பழுதணையாது எனப் பகர்ந்து பரமர் செய்ய விரைமவர்த் தாள் போற்றிப் புகலிவேந்தர் வேயுறுதோளியை எடுத்து விளம்பினாரே...' " ళీ அமணர்கள் செய்யக்கூடிய கொடுமைகளை அனுபவித்தவரா கலின் நாவரசர் தாம் வயதில் மூத்தவர் என்ற உரிமையைப் பயன்படுத்திக் கொண்டு 'பிள்ளாய்!” என்று அழைத்து, 'உறுகோள் தானும் தீய ' என்று கூறுகிறார்.எனவே ஒரு காரியத்தைச் செய்யத் தொடங்கு முன் நாளுங் கோளும் பார்த்துச் செய்கின்ற பழக்கம் இருந்தது என்பதனை அறியமுடிகிறது. இறைவன்பால் உறுதியான நம்பிக்கை உடையவர்கள் இதுபற்றிக் கவலைப்பட வேண்டிய தில்லை என்ற மனத்திடத்தையும் பிள்ளையார் மக்களுக்குக் கூறுவது போல 'பரசுவது நம் பெருமான் கழல்கள் என்றால் பழுது அணையாது' என்று எடுத்துக் கூறுவதாகச் சேக்கிழார் பாடுவதும் சமுதாயத்திடை நிலவிய கொள்கைப் போராட்டத் தின் இரண்டு பக்கங்களேயாகும். மக்கள் எதிரே இத்தனை அற்புதங்களை இயற்றிக் காட்டி இறைவனை நம்பினோர் இத்தகைய வாழ்வு வாழலாம் என்று இப் பெருமக்கள் எடுத்துக் காட்டியவுடன் அனைவருமே மனம் மாறிவிட்டனர் என்று கொள்ளவும் முடியாது. தாம் பிடித்த பிடியை விடாமல் தம் நம்பிக்கையின் அடிப்படையில் தாம் செய்தவற்றையே செய்து கொண்டு வாழ்ந்த சமுதாய மக்களே அதிகமாவர். இந்தக் கொள்கைப் போராட்டத்தால் மனம் மாறினவர்கள் என்று கூறத்தக்கவர் ஒரு சிலரேயாவர். இதுவே சமுதாய அமைப்பின் அடிப்படையாகும். .