பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374 பெரியபுராணம்- ஓர் ஆய்வு கள் சங்கப் புலவர் புதியனவாகப் புனைந்த பாடல்களை ஆவலுடன் செவிமடுக்கும் காலம்' என்று கூறுவது கூர்ந்து நோக்கத்தக்கது. தொல்காப்பியனார் கூறிய விருந்து என்னும் இலக்கியப்பகுதி கலித்தொகைக் காலத்திலும் இருந்தது என்று கொள்வதில் தவறு இல்லை. அப்படியானால் காப்பியம் என்று குறிக்கப்படும் இலக்கியப் பிரிவு எப்பொழுது தோன்றிற்று? நெடும் பாடல் என்ற சொல்லோ தொடர்நிலைச் செய்யுள் என்ற சொல்லோகூடப் பயிலப்படவில்லை என்றால் வேறு ஏதோ ஒரு சொல்லால்தான் காப்பியம் குறிக்கப்பட்டிருத்தல் வேண்டும். மிகப்பழைய கதையைக் கூறும்பகுதியும், புதியதாகப் புனையும் பகுதியும் இருந்திருத்தல் வேண்டும். தொல்காப்பியர் காலத்தில் தான் இத்தகைய குழப்பம் என்றால், இலக்கியம் பல்வேறு துறைகளில் வளர்ந்துள்ள பிற்காலத்திலும் இக்காலத்திலுங் கூடக் காப்பியம் என்பதற்குச் செம்மையான முறையில் இலக்கணத்தை யாரும் கூறவில்லை. வடமொழியில் தோன்றிய காவிய் தர்ஸம் என்பதை முற்றிலு மாகத் தமிழாக்கஞ் செய்யாமல் அதனை அடிப்படையிற் கொண்டு பல்வேறு வேறுபாடுகளுடன் தமிழில் செய்யப் பெற்றது தண்டியலங்காரம். இதுவும் 12ஆம் நூற்றாண்டு வாக்கில் செய்யப் பெற்றதாகும். முற்றிலும் தமிழ் மரபைத் தண்டியாசிரியர் மேற் கொள்ள விரும்பியிருப்பின் சிலம்பு முதல் சூளாமணி வரையிலான தமிழ்க் காப்பியங்கள் பலவற்றை அடிப்படையாகக் கொண்டு இலக்கணம் வகுத்திருக்கலாம். "காவ்யதர்ஸம் காப்பியம் பற்றிக் கூறுவதற்கும் தண்டியலங்காரம் அதுபற்றிக் கூறுவதற்குமே வேறு பாடுகள் நிரம்பி உள்ளன எனப் பேராசிரியர் வையாபுரிப் பிள்ளை குறிக்கின்றார். வடமொழிக் காவியதர்சத்துடன் மாறுப்பட்டால் தமிழ்க் காப்பியங்களை அடியொற்றியாவது தமிழ்த் தண்டி செய்திருக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் எந்த அடிப்பைடயில் இவர் தம் இலக்கணத்தை வகுத்தார் என்பது சிந்தனைக்குரியதே. இதுபற்றிக் கூற வந்த முனைவர் து. சீனிச்சாமி தம்முடைய 'தமிழில் காப்பியக் கொள்கை' என்ற நூலில் தண்டி முதல் சிதம்பரப் பாட்டியல் வரை உள்ள இலக்கண நூல்களைக் குறிப்பிட்டு 'இவற்றை வைத்துப் பழைய தமிழ்க் காப்பியங்களின் நெறியைக் கணித்தல் இயலாது; பொருந்தாது. என்று கூறிச் செல்கிறார். தண்டி போன்ற நூல்கள் தமிழில் உள்ள காப்பியக் கூறுகளை நன்கு ஆய்ந்து காப்பிய இலக்கணம் வகுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, அந்நூல் 'நாற்பொருள் பயக்கும் நடை நெறி,