பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23. வழிநூலும் விரிநூலும் முதல், வழி, சார்பு நூல்கள் எனப் பழமை தொட்டே பிரிவினை செய்துள்ளனர். இத்தமிழ்நாட்டு மரபில் முதல், வழி, சார்பு நூல்கள் என்ற வழக்காறு தொல்காப்பியனார் காலந்தொட்டே இருந்து வந்துள்ளது. இவ்வாறு பிரிவினை செய்வதனால் பல நன்மை களும் பல தீமைகளும் ஏற்பட்டுள்ளன என்பதை மறப்பதற் கில்லை. முன்னர்த் தோன்றிய நூலினும் மாறுபட்டுப் பின்னர் ஒரு நூலை ஒருவன் இயற்றினால், அதனைக் கால வேறுபாட்டால் ஏற்பட்ட வளர்ச்சி என்று கொள்ளும் பழக்கம் பண்டு தொட்டே மிகக் குறைவாகவே இருந்து வந்தள்ளது. பின்னர் வந்த நூல் நிலைக்க வேண்டுமானால் அதற்கு ஏதாவது கதைகள் புனைந்து அதனை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நிலைநாட்ட முற்படும் பழக்கமும் இருந்து வந்தது. பின்னர் வந்த நூலை எளிதில் கொள்வதில்லை. இறையனார் களவியல் கதை இதற்கு எடுத்துக்காட்டு இறையனார் களவியல் தோற்றம் பற்றிய கதையும் இதனை நன்கு விளக்கும். கிறித்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகள் முற்பட்ட தொல்காப்பியம் கூறும் களவியல், கற்பியல் இருக்கவும் கிறித்துவுக்குச் சில நூற்றாண்டுகள் பிற்பட்ட இறையனார் நூல் ஏன் வந்தது? என்று கேட்பார் வாயை அடைக்கவே இக் கதை எழுதிச் சேர்க்கப்பட்டது. 'ஆலவாயின் அவிர்சடைக் கடவுள் சிந்திப்பான்' என்னை பாவம்! அரசற்குக் கவற்சி பெரிதாயிற்று, அதுதானும் ஞானத் திடையாகலான் யாம் அதனைத் தீர்க்கற்பாலம்' என்று கருதி அறுபது சூத்திரஞ் செய்து அதனைச் செப்பேட்டில் எழுதித் தன் பீடத்தின் கீழ் இட்டான்.