பக்கம்:பெரிய புராணம் ஓர் ஆய்வு-2.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வழிநூலும் விரிநூலும் 65 I இம்முறையில் கதை கட்டினதால் யாரும் அந்த நூலை, ஏன் தோன்றிற்று? என்று கேட்க மாட்டார்கள் என்று கருதினர் என்று தெரிகிறது. இத்தகுைழு ஒரு மனநிலை இத் தமிழகத்தைப் பொறுத்த வரை இன்றும் இருந்து வருகிறது. கண்ணப்பர் வரலாறு கூறிய மூவர்-இவர்களுள் முரண்பாடு முதல் நூல் என்று கூறப்பெறும் திருத்தொண்டத் தொகை ஒவ்வோர் அடியில் ஒர் அடியார் பற்றிக் கூறியுள்ளதைப் பின்னர்த் தோன்றிய நம்பியாண்டார் நம்பி என்பார் ஒரளவு விரித்துத் திருத்தொண்டர் திருவந்தாதி என்ற பெயரில் 89 பாடல்களில் பாடினார். அவருக்குப் பின் வந்த சேக்கிழார் திருத்தொண்டத் தொகையை முற்றிலுமாக ஏற்றுக் கொண்டார். நம்பியின் திருவந்தாதியைப் பெரிய அளவில் ஏற்றுக் கொண்டாலும், ஒரு சிலவிடங்களில் அவரினும் மாறுபட்டுப் பாடுகிறார் என்ற கருத்து நீண்ட நாட்களாக இருந்து வரும் ஒன்றாகும். இக்கருத்துக்கு வடிவு கொடுத்து ஆராய்ச்சி முறையில் முனைவர் மா. இராசமாணிக்கனார் தம் பெரியபுராண ஆராய்ச்சி நூலில் எந்த எந்த இடங்களில் சேக்கிழார் நம்பியுடன் மாறுபடுகிறார் என்பதை விரிவாக ஆய்ந்து எழுதியுள்ளார். ' ஆனால் இந்த மாறுபாடு, வகைநூல், விரிநூல் என்பவற்றின் இடையே இருத்தல் கூடாது என நினைத்த பேரறிஞர் திரு வெள்ளைவாரணனார் தம் பன்னிரு திருமுறை வரலாறு நூலில் இவற்றுக்கெல்லாம் சமாதானம் கூறுகின்றார்." நம்பியாண்டர் நம்பி சேக்கிழாரைப் போலப் புலமையோ, ஆராய்ச்சி அறிவோ பெற்றவர் அல்லர் என்பது தெளிவு. அவர் எல்லா இடங்களையும் சென்று சுற்றிப் பார்த்து ஒவ்வொரு நாயனாருடைய வரலாற்றையும் நன்கு ஆய்ந்து தெளிந்து கூறினார் என்றுங் கொள்ள முடியாது. இந்த நிலையில் நம்பியாண்டார் நம்பி செய்துள்ள பேருபகாரத்துக்குப் பெரிதும் நன்றி பாராட்டுகிறார் என்றாலும் முற்றிலும் அவரை ஆதார மாகக் கொண்டு தம் வரலாற்றுக் காப்பியத்தை அமைக்கச் சேக்கிழார் தயாராக இல்லை என்பது மறக்க முடியாத உண்மை. கண்ணப்பர் பற்றி நம்பியைத் தவிர நக்கீரர், கல்லாடர் என்பவர்களும் பாடியுள்ளனர். இவை ஒன்றுக்கொன்று முரண்பட்ட செய்திகளைக் கூறுகின்றன என்பதை எளிதில்